போபால் விஷக்கசிவு சம்பவத்தில் அரசியலை மட்டுமே அதிகம் கூறும் நூல்!



 போபால் அழிவின் அரசியல்
மருதன்
கிழக்குப் பதிப்பகம்

மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலை இயங்கி வந்தது. இங்கு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நடந்த விஷவாயு கசிவில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த விஷ வாயு பாதிப்பு நிலம், நீர், காற்று என்ற பரவி இன்றுவரை மக்களை வதைத்து வருகிறது. 

நூலில் அக்காலகட்ட காங்கிரஸ் கட்சி அரசியல், அதிலுள்ள தலைவர்களின் நிலைப்பாடு, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் வரையில் கறைபடிந்தவர்கள் என நிறுவ முயல்கிறார் நூலாசிரியர். 

 ராகுல் என்ற பாத்திரம், இந்திராகாந்தியின் மரணத்திற்கு பழிவாங்கவேண்டும் என்று கூறுகிறது. யார் இந்த ராகுல்  என புரியவில்லை. நூலை வாசிக்கும்போது நிறைய இடங்களில் இது புனைவா, கட்டுரையா என்று குழப்பம் வந்துகொண்டே இருக்கிறது. 

நூலாசிரியர், கட்டுரைகளை எழுதுவதில் திறமையானவர். ஆனால், புனைவில் எப்படியோ தெரியவில்லை. இந்த நூலில் புனைவை முயன்றிருக்கிறார். அது எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை. 

பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரத்ன நடார், அவரது பிள்ளை பத்மினி வழியாக கதை சொல்லப்படுகிறது. இரண்டாவது கதையாக யூனியன் கார்பைடு இந்தியா எப்படி தொடங்கப்பட்டது என கூறப்படுகிறது. 

ரத்ன நடார், பத்மினி பாத்திரங்கள் வழியாக ஆசிரியர் என்ன சொல்ல நினைக்கிறார் என்று புரியவில்லை. அடிப்படையாக அவர் காங்கிரஸ் கட்சி நடந்து பேரிடருக்கு காரணம், அவர்கள் செய்த அரசியல் காரணமாக மக்கள் கொல்லப்பட்டனர், முக்கிய குற்றவாளியான வாரன் தப்பிவிட்டார் என்று கூற விழைகிறார் என்றே கொள்வோம். 

அதற்கு பிறகு மரபணு மாற்ற விதைகளை விற்கும் மான்சாண்டோ நிறுவனம், பழங்குடி பெண்ணான பத்மினியின் கதவைத் தட்டி விதைகளை விற்கிறது. நூல் அதோடு நிறைவு பெறுகிறது. 

நூலாசிரியர் உலகமயம், தாராளமயமாக்கல் பற்றி அறிந்திருப்பார் என நம்புகிறோம். அதை தெளிவாக அறிந்தவர், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை தேடி வருவது எதற்கு என தெரியாதா என்ன? 

உள்ளூர் பத்திரிகை போபால் பற்றி பல்வேறு கட்டுரைகளை எழுதியும் கூட மக்கள் அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. பிற சூழல் அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி அரசியல் லாபங்களுக்காக மட்டுமே இயங்குகிறது. மற்றவர்கள் யாருமே மக்களவையில் இல்லையா? இந்தியா ஒற்றைக் கட்சி முறையில் மட்டும்தான் இயங்கியதா என்ன?

நூலில் இணைய லிங்குகள் அளிக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் அதை சொடுக்கி கூடுதலான தகவல்களைப் பெறலாம். 

பன்னாட்டு ஆலைகள், ,முதலீடு வந்தபோதும் மக்கள் எந்தளவு கவனமாக இருக்கவேண்டும், தங்களது உரிமைகளை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை நூல் தருவதாக கொள்ளலாம். மூன்றாம் உலக நாடான இந்தியா, அடிப்படையில் மதவாத நாடு. கடவுள், சாதி, மதம், வேதம் என கிளைகளை விரித்திருப்பதே அத்தனை வேதனைகளுக்கும் காரணம். 

நூலில் ஒரே ஒரு பத்திரிகையாளர் மட்டுமே உண்மையை புலனாய்வு செய்து பிறருக்கு தெரிவிக்க முயல்கிறார். வேறு எவருமே மூச்சு விடுவதில்லை. அந்த மௌனமே ஆச்சரியமாக உள்ளது. இறுதியாக பார்ப்பன பத்திரிகை இந்தியன் எக்ஸ்பிரசில் போபால் விஷவாயு பற்றிய கட்டுரை வெளியாவதாக நூலாசிரியர் எழுதுகிறார். 

நூலின் பின்பகுதியில், யூனியன் கார்பைடு எப்படி இந்திய நீதிமன்றத்தை கையூட்டு கொடுத்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்பதை விளக்கியிருக்கிறார்கள். எப்போதும் போல பணம் வென்றுவிட்டது. அவ்வளவுதான். நூலில் திடீரென தொடர்பே இல்லாமல் சஞ்சய் காந்தி வருகிறார். அப்புறம் அவர் திடீரென மறைந்துவிடுகிறார். 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரம் பற்றிய தகவல்கள் கூறப்படுகின்றன. இதெல்லாம் நூலுக்கு எந்த வகையில் தொடர்பு என புரியவே இல்லை. 

போபால் விஷவாயு தாக்குதல், அதிலுள்ள அரசியல் என இருபகுதிகளாக நூல் எழுதப்பட்டிருக்கலாம். தெளிவாக இருந்திருக்கும். 

கோமாளிமேடை குழு




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!