இடுகைகள்

ஊசரவெலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பச்சோந்தியாக குணம் மாறினாலும் காதலை மறக்காதவன்தான் டோனி! - ஊசரவெலி - சுரேந்தர் ரெட்டி

படம்
            ஊசரவெல்லி   காஷ்மீரில் என்டிஆர் ஜூர்(டோனி), தமன்னாவை(நிகாரிகா) சந்திக்கிறார். தீவிரவாதிகள் ஒவ்வொருவராக பிடித்து வைத்துள்ளவர்களை கொன்று கொண்டு இருக்கிறார்கள். இதனால் என்டிஆர், தான் இன்னும் காதல், முத்தம், கல்யாணம் என எதுவுமே செய்யவில்லை என ஆதங்கப்பட அவருக்கு நச்சென முத்தம் கொடுத்து வாழ்க்கையை பூரணமாக்குகிறார். பின்னர் அங்கிருந்து தப்பிவிடுகிறார்கள். பின்னர் இருவரும் சந்திக்கிறார்கள். டோனி நிகாரிகாவை காதலிக்க தொடங்குகிறான். அது அவளது தோழிக்கு  வித்தியாசமாக தோன்றுகிறது. ஆனால் டோனிக்கு முன்பாகவே மந்திரியின் மகன் நிகாரிகாவை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுவிடுகிறான். ஆனால் டோனியைப் பொறுத்தவரை அதனால் என்ன என்று பதினைந்து நாள் டைம் கொடுங்கள் என்று நிகாரிகாவிடம் நேரம் கேட்டு காதலிக்கிறான். படத்தில் என்னதான் கதை என இந்த இடத்தில் நிறையப் பேர் பொறுமையிழந்து விட வாய்ப்பு அதிகம்.    ஆனால் இது சுரேந்தர் ரெட்டியின் படம். எனவே படத்தின் பின்பகுதி அழுகையான கதைக்கு முன்னதாகவே நிறைய காமெடி காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவை அத்தனையும் பிரமாதமாகவே படத்திற்கு மேட்ச் ஆகின்றன. ரகுபாபு, ரகு கர