இடுகைகள்

சந்தேகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லவ் இன்ஃபினிட்டி: நிஜம் சொல்லடி தோழி!

படம்
pinterest லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அரசு கார்த்திக் நான் என்னைப் பற்றி நிறைய உனக்கு சொல்லிவிடணும்னு நினைக்கிறேன். ஆனால் என் மனசும் எழுத்தும் அதற்கு உதவுமான்னு எனக்கு தெரியல. நான் நிறைய உங்கிட்ட பேசணும்னு நினைச்சு College வந்தால் உன் முகத்தைப் பார்த்ததும்  I'm Gone. பொய்யில்லை. என்ன பேசணும்னு அத்தனையையும் மறந்து போயிடுறேன். ஆணும் பொண்ணும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிட்டு வெச்சிருக்கிற நட்பு காதலை விட புனிதமானதுன்னு நான் நம்புறேன். பிரிய தோழி! உன் கண்களில் கண்ணீர் வர நானும் ஒரு காரணம் என்பது வலிக்க வைக்கிறது. யாரோ சிலரால் நாம் பாதிக்கப்பட்டுவிட்டோம். ஆனாலும் இதற்கு நான் காரணம்னு நினைக்கும்போது குற்றவுணர்ச்சி கண்ணில் விழுந்த தூசியாக உறுத்துகிறது. இது உன் மனசுக்கும் தெரியும். அதனால்தான் என்கூட பேசுவதற்கு நீ மறுக்கிறாய். இல்லையா? அப்படியில்லையென்று சொல்லேன். Please. நீ அப்படி சொல்வாய் என்றுதான் வகுப்பில் உன் முகம் பார்த்தே உட்கார்ந்திருக்கிறேன். பாராமுகமாய் அமர்ந்து மனம் உடைக்கிறாயே! என்னைப் பற்றி எழுதியவைகளில் நிறைய விஷயங்கள் விடுபட்டு இருக்கிறது

லவ் இன்ஃபினிட்டி: உன்னை என்ன சொல்லி திட்டுவேன்?

படம்
Pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: கா.சி.வின்சென்ட், முரடன் செந்தில் நீ என்னை சந்தேகப்பட்டாலும் நான் விரும்புகிற ஒரே பெண் நீதான். என் அம்மாவை அடுத்துத்தான். சந்தேகமில்லை. நான் யுவராஜ் மாதிரி ஆளுகளோடு பழகினாலும் அவனோட Personal நானும், என்னோடதில அவனும் தலையிட மாட்டோம். அந்த Friendship சும்மா Just like that. ஆனால் செல்வா மாதிரி Friend எனக்கு இருக்கிறான்னு சொல்லிக்கிறதுல எனக்குத்தான் பெருமை.  நீ அர்ச்சனாவிடம் பழகு. எனக்கு பிடிக்கலை. நான் ஒதுங்கிவிட்டேன். அம்பிகா உன்னிடம் எத்தனை மேட்டர் என்னைப் பற்றி சொல்லியிருப்பாள்? அவ உங்கிட்ட சொல்லாம விட்ட நிறைய மேட்டர் பசங்களுக்குத் தெரியும். இப்படி நடக்கும்னு எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் அவகிட்ட போன வருஷத்திலிருந்தே நாங்க பேசறதில்லை. நான் செல்வா, ஸ்ரீராம் எல்லாம். இப்ப நான் மகாதேவிகிட்ட  கூட பேசறதில்லை. மோகனாகிட்டேயும்தான். நீயே பேச மாட்டேங்கிற. நீ ஏன் உன்னைக் கஷ்டப்படுத்திக்கிட்டு என்கூட பேசற. இந்த Lr எழுதியிருக்க மாட்டேன். ஆனால கிளாஸில் உன்கூட சண்டை போட முடியலை. அதான். அதனால் இப்போ திட்டி விடுகிறேன்.

லவ் இன்ஃபினிட்டி: என்னை ஏன் நம்ப மறுத்தாய்?

படம்
pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ச.அன்பரசு வரிகளை மடக்கி எழுதினால் கவிதை என்று உலகம் பார்க்கும் என்பதை புரிந்துகொண்டபோது இப்படி எழுதினேன். எப்படி மாற்றுவேன்? புது வீடு  எல்லாமே புதுசாய் என்னால்  எடுத்துப் போக முடிந்தது நீயில்லாத வாழ்க்கையையும் நிசப்தமான மனசையும்தான்.  புது வீட்டைக் காட்டிலும்  பழைய வெளிச்சம் குறைந்த  இருளான மழை ஒழுகும் நீ வந்து போன  நீ ஒளிந்து ஓடி விளையாடிய நீ தலை இடித்துக்கொண்ட தாழ்வாரம்,  நீ நடந்த சுவடுகள் அழியாமல் இருக்கும் என் பழைய வீடு அற்புதமானது.  வீடு மாற்றிக்கொள்ளலாம் மனசை எப்படி மாற்ற????? அடுத்தவர்கள் ஆயிரம் சொல்லி கெடுக்க நினைக்கலாம் நீ எப்படி நம்பலாம்? என்மேல் சந்தேகம் எப்படி வரலாம்? உனக்கு அவள் தோழி எனக்கு அவள் யாரோ? நல்லவர்களுக்கு தீமை விளையும்போது தடுக்க நினைப்பதும், தடுப்பதிலும் தவறில்லை பாம்புக்கு பால் வார்த்தால்? அதனால்தான் அனைத்தும் அறிந்தும் அமைதியாக இருக்கிறேன். நாம் தப்பு செய்தால்தானே பிரச்னை வருகிறது? அவள் உப்பு தின்றாள், தண்ணீர் இப்போதுதான் குடிக்கிறாள். அவ்வளவுதான். அதிக