லவ் இன்ஃபினிட்டி: உன்னை என்ன சொல்லி திட்டுவேன்?
Pexels.com |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், முரடன் செந்தில்
நீ என்னை சந்தேகப்பட்டாலும் நான் விரும்புகிற ஒரே பெண் நீதான். என் அம்மாவை அடுத்துத்தான். சந்தேகமில்லை. நான் யுவராஜ் மாதிரி ஆளுகளோடு பழகினாலும் அவனோட Personal நானும், என்னோடதில அவனும் தலையிட மாட்டோம். அந்த Friendship சும்மா Just like that. ஆனால் செல்வா மாதிரி Friend எனக்கு இருக்கிறான்னு சொல்லிக்கிறதுல எனக்குத்தான் பெருமை.
நீ அர்ச்சனாவிடம் பழகு. எனக்கு பிடிக்கலை. நான் ஒதுங்கிவிட்டேன். அம்பிகா உன்னிடம் எத்தனை மேட்டர் என்னைப் பற்றி சொல்லியிருப்பாள்? அவ உங்கிட்ட சொல்லாம விட்ட நிறைய மேட்டர் பசங்களுக்குத் தெரியும். இப்படி நடக்கும்னு எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் அவகிட்ட போன வருஷத்திலிருந்தே நாங்க பேசறதில்லை. நான் செல்வா, ஸ்ரீராம் எல்லாம்.
இப்ப நான் மகாதேவிகிட்ட கூட பேசறதில்லை. மோகனாகிட்டேயும்தான். நீயே பேச மாட்டேங்கிற. நீ ஏன் உன்னைக் கஷ்டப்படுத்திக்கிட்டு என்கூட பேசற. இந்த Lr எழுதியிருக்க மாட்டேன். ஆனால கிளாஸில் உன்கூட சண்டை போட முடியலை. அதான். அதனால் இப்போ திட்டி விடுகிறேன்.
போடி!
(காதல் மணம் வீசும்)