லவ் இன்ஃபினிட்டி: யார்க்கும் கடன் கொடுக்க மாட்டேன்
Pexels.com |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: அரசு கார்த்திக், பிருந்தாஸ்ரீனி
நீ என்னதான் பேச மாட்டேன்னு சொன்னாலும் என்னோட மனசு கேட்கவே மாட்டேங்குது. அப்புறம் Mahadevi கிட்ட Question Paper காசு நீ கேட்டே. அது என்கிட்ட கேட்டது. நான் தராமல் இருப்பேனா? சொல்லு. அது திருப்பிக் கொடுத்தது. நான் வாங்கலை. அன்னிக்கு கை நீட்டுன்னு விளையாட்டா மகா சொல்ல நான் வெகுளியாக நீட்டிட்டேன். டக்குன்னு காசை கையில வெச்சிருச்சு. ஏமாந்துட்டேன். நான் யார்கிட்ட கடன் வாங்கினாலும் கொடுக்க மாட்டேன். யாருக்காவது கொடுத்தாலும் திருப்பித்தான்னு கேட்க மாட்டேன். ஏன்னா Friends குள்ள Rs problem வந்துடும். நான் இதுவரை உன்கிட்டே காசே கேட்டதில்லை. இப்பத்தான் கண்டுபிடிச்சேன்.
Jolly யா எதுவும் எழுத முடியலை. ஆடிப் பண்டிகைக்கு ஸ்ரீராம் என் வீட்டுக்கு வரணும்னு சொன்னான். So அன்னிக்கு ஸ்ரீராம் கூடத்தான் program.
எங்க வீட்டுக்கு எல்லாரையும் கூட்டிப்போறது பள்ளிக்கூட,த்துல இருந்தே தொடங்கியிருச்சு. நான் ரொம்ப பேதம் பார்க்கிறது இல்ல. Monthly Test ல ஒண்ணுமே எழுதலை. செல்வா புக்கைப் பார்த்து எழுதிருவான். அவன் பேப்பரைப் பார்த்து நான் எழுதுவேன். படிக்கவே இல்லை. Maths, A\c எல்லாம் ஜீரோதான். ஒரு எக்சாமுக்கு லீவு வேற. எவ்வளவு Fine கட்டப்போறேனோ தெரியல.
ஞாயிறு 6.30
என்னைப் பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். நான் இருக்கிறதால யாருக்கும் சந்தோஷம் இல்லை. இல்லாம போனாலும் யாரும் கவலைப்பட போறதில்லை.
சிலசமயம் எனக்குன்னு யாரும் இல்லைன்னு தோணுது. இப்படி Think பண்ணியே கவலை அதிகமாயுடுது. இப்போ படிப்பில் 61% இருக்குது. இதே % அப்படியே கடைசிவரை இருந்தாலே போதும். நீ 80% வாங்கணுங்கிறது என் ஆசை. கண்டிப்பாக நீ வாங்குவே.
அம்பிகா பத்தி Latest செய்தி ஒண்ணு பசங்க சொன்னாங்க. அதை அப்படியே சொன்னா சுவாரசியம் போயிரும். நீ தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு. உனக்கு தெரியும்ணு நினைக்கிறேன்.
அம்பிகாவுக்கு புடிச்சது ஏட்டிக்கு போட்டி - புரிஞ்சுதா 4-1 = 3rd
(காதல் மணம் வீசும்)