லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லுது நெஞ்சம்
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: ரிஷிகேஷ் காந்தி, பவாசிங்
நான் ஏன் உன்னை இப்படி சுத்திவர்றேன்னு சத்தியமாக எனக்குத் தெரியல. டெஸ்டோஸ்ட்ரோன் வேகமா, ஜாதக கட்டத்துல ஏதாவது சிக்கலா எதுவேண்ணா இருந்துட்டு போகட்டும். இப்போதைக்கு நீதான் எனக்கு முக்கியம்.
இவன் ஏன் என்னை இப்படி தொந்தரவு பண்றான்னு நீ நினைக்கலாம். இதுநாள் வரைக்கும் இதைச் சொல்லாம இருந்ததுதான் Problem பெரிசாக காரணம். கொஞ்சநாள் பிரிவிலாவது என்னைப் பற்றி நீ தெரிந்துகொள். தினம் தினம் உன்னுடன் பேசினால் உன் மனதின் வலி மேலும் மேலும் அதிகரிக்கும். அதனால் இனிமேல் சிலகாலம் நமக்குள் தொடர்பே வேண்டாம். பேசவே வேண்டாம் என்பதைத்தான் சொல்கிறேன்.
இது நிரந்தரம் அல்ல தற்காலிகம்தான். புத்தி கெட்ட தேசம் பொடிவெச்சுப் பேசும் எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே. அன்பு கட்டாயப்படுத்தி வருவதல்ல. அப்புறம் தினமும் நான் உனக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்.
மலரே இனி கொஞ்ச நாட்கள்
நீ பேசு. மௌனமொழி. கவலைகள் வேண்டாம்.
உனக்குத்தான் நான் இருக்கிறேனே!
எழுத வேண்டாம்னு நெனச்சாலும் உன் முகம் மனசுக்குள்ள தாமரையா பூத்தாவே பேனாவைத் தேட கை வேகமாக ஓடுது. அது என்னவோ போ.. இதுக்கு எந்தப் பேர வேண்ணாலும் உலகம் வெச்சிக்கட்டும். எனக்கு அது முக்கியமில்ல. இப்போது இந்த மனசுல உன்னை நெனைச்சிக்கிட்டு இருக்கும்போது உடம்பு முழுக்க கரண் பாயுற பரவசம் எனக்கு போதும். என்னோடு ஆயுசுக்கும்.
(காதல் சொல்லுவேன்)