தூங்கும்போது புதிய விஷயங்களைக் கற்க முடியுமா?

bed, boy, and man image
Pinterest/we heart it

ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

தூங்கும்போது புதிய விஷயங்களைக் கற்க முடியுமா?


ஆர்க்கிமிடிஸ் யுரேகா என்று கத்தியதை மனதில் வைத்து இப்படியொரு கேள்வி வந்திருக்கலாம். நாம் எதை மனதில் தீவிரமாக யோசிக்கொண்டு இருக்கிறோமோ அதற்கான தீர்வு நமக்கு கிடைக்கும். அது எப்படி கிடைக்கிறது என்பதுதான் மேஜிக்.

தூங்கும்போது பாடலைக்கேட்டுக்கொண்டே தூங்குகிறார் ஒருவர் என்றால் நம்மால் அதனை பதிவு செய்ய முடியாது. தூங்கும்போது மூளை ஓய்வெடுக்கிறது என்பது உண்மை.

தூக்கத்தில் கற்பதை ஹிப்னோபீடியா என்று கூறுகின்றனர். இதற்கு மருத்துவரீதியாக வரலாறும் உண்டு. 1914 ஆம் ஆண்டு ஜெர்மன் உளவியலாளர் ரோசா ஹெய்ன் என்பவர் இதுகுறித்த ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையை வெளியிட்டார். ஒருநாளில் தினசரி கற்பதைவிட மாலைநேரத்தில் நாம் கற்பது அதிகம் என்பது இவரின் ஆய்வு முடிவு.

தூக்கம்தான் நமது அன்றைய நிகழ்ச்சி நினைவுகளை மாற்றி அமைத்து சேமிக்க வேண்டும் என்றால் சேமித்தும் இல்லையென்றால் அதனை அழித்து நம் மனதில் உணர்ச்சி சமநிலையை ஏற்படுத்துகிறது. 1950 ஆம்ஆண்டு செய்த ஆய்வுகளில் தூக்கத்தில் கற்பது என்பது உடான்ஸ் ப்ரோ என முடிவெடுத்துவிட்டனர். ஆனால் இன்று அதன்மேல் நம்பிக்கை வர பல்வேறு சோதனைகளைச் செய்து வருகின்றனர். 


நன்றி: லிவ் சயின்ஸ்