இடுகைகள்

ஹரித்துவார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சொத்துக்களை எரி, சிறையில் அடை, வணிகத்தை தடு - இந்து தேசியவாதத்தின் பரிசோதனைக்கூடமான உத்தர்கண்ட் மாநிலம்!

படம்
  அதீத இந்து தேசியவாதத்தின் பரிசோதனைக்கூடம்! இந்தியாவிலுள்ள உத்தர்கண்ட் மாநிலம் கடவுளின் நிலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பல நூறு கடவுள்கள் இருக்கிறார்கள் எந்த கடவுளுக்கு சொந்தமான நிலம் என்றால், இந்துக்கடவுள்களுக்கான நிலம் என பல நூற்றாண்டுகளாக கூறி வருகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இந்து கோவில்களும், புனிதப்பயணம் செய்வதற்கான இடங்களும் உள்ளன.  கடந்த பத்தாண்டுகளாக வலதுசாரி மத அடிப்படைவாதிகள், உத்தர்கண்ட் மாநிலத்தை அதீத தேசியவாதத்தை அரசியல் சக்தியாக பயன்படுத்தி வருகிறார்கள். அங்குள்ள முஸ்லீம் சிறுபான்மையினரை பகிரங்கமாக மிரட்டியும், இனப்படுகொலை செய்வோம் என சூளுரைக்கவும் தொடங்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மூன்றாவது முறையும் வெறுப்பு, பிரிவினை கருத்துகள், முஸ்லீம்களை அடிப்போம், துரத்துவோம், 400 இடங்கள் வென்றால் அரசியலமைப்பை மாற்றுவோம், மசூதியை இடிப்போம் என ஆக்கப்பூர்வமான பல்வேறு வாக்குறுதிகளை பாரதீயன்கள் வெளிப்படையாக அளித்து வருகிறார்கள்.  கல்வி அறிவு இல்லாத மூடநம்பிக்கையில் ஊறிய, தனது வாழ்க்கையை முன்னே...