இடுகைகள்

பசிபிக் கடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்க்க வேண்டிய இடம் - மான்ட் செயின்ட் மிச்செல் , பசிபிக் கடலில் ஏற்படும் மாசுபாடு

படம்
  மான்ட் செயின்ட் மிச்செல் பிரான்ஸ் நாட்டில் நார்மாண்டியில் அமைந்துள்ள தீவு. மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் தீவுக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எல்லாமே கிரானைட்டில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் மலைமீது அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஜாலி சுற்றுலா செல்ல நினைத்தால் காலையில் நேரமே எழுந்தால் சூரியக் கதிர்கள் உங்கள் மீது படும்போது புகைப்படம் எடுக்கலாம். அதை இன்ஸ்டாகிராமில் பதியலாம். நேரம் ஆனால் நீங்கள் மட்டுமல்ல, பிறருக்கும் தூக்கம் கலைந்துவிடும். எனவே நிறைய பேர் வந்துவிடுவார்கள். நெரிசலில் புகைப்படம் எடுத்து நமது வரலாற்றை நிரப்பவேண்டியிருக்கும். கார்களை இரண்டு கி.மீ. தூரத்தில் நிறுத்திவிடவேண்டிய நிபந்தனை உண்டு. தொன்மை கட்டுமானங்களை மக்களின் புகைப்பட பரவசத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஏற்பாடு. ஆண்டுக்கு 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போகிறார்கள். மான்ச் செயின்ட் மிச்செலில் அற்புதமாக கட்டப்பட்ட தேவாலயம் உண்டு. அடுத்து, இங்கு பாறைகளை பிளந்து உருவாக்கப்பட்ட இடம், போர்க்காலத்தில் மக்கள் ஒளிந்துகொள்ள பயன்பட்டது. பிறகு மக்களை சிறை வைக்கும் சிறையாகவும் பயன்பட