இடுகைகள்

கேரி ரிட்ஜ்வே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

49 பெண்களை கொலை செய்ததற்காக மன்னிப்புக் கடிதம்

படம்
  ரிட்ஜ்வே, கேரி லியோன் அமெரிக்காவில், 1982-2001 ஆகிய ஆண்டுகளில் சிறுமிகள், இளம்பெண்கள் என 49 பேர் கடத்தப்பட்டு பின்னர், கொல்லப்பட்டனர். வாஷிங்டனைச் சேர்ந்த காவல்துறை, கொலையாளியைத் தேடிக்கொண்டிருந்தது. கொலையாளிக்கு க்ரீன் ரிவர் கில்லர் என பெயர் சூட்டி விளம்பரப்படுத்தியது. பச்சை ஆற்றின் கரையில்தான் கொன்றவர்களை கொலையாளி புதைத்து வைத்தார். கரை நெடுக பிணங்களாக காவல்துறை தோண்டியெடுத்தனர். அப்போதும் கூட நிறைய பிணங்களின் அடையாளம் தெரியவில்லை.   1982ஆம் ஆண்டு சியாட்டிலில் லியான் வில்காக்ஸ் என்ற இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இவர் டகோமா எனும் பகுதியைச் சேர்ந்த பெண்மணி. இதற்கடுத்தும் ஒரு கொலை நடைபெற்றது. ஆனால், இரு கொலைகளுக்கு இடையிலான ஒற்றுமை பெரிதாக ஏதுமில்லை. இதனால் காவல்துறை அதை பச்சை ஆற்றுக் கொலைக் கணக்கில் சேர்க்கவில்லை. 1982ஆம் ஆண்டு   ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெண்டி, ஜிசல், டெபோரா, மார்சியா, சிந்தியா ஆகிய இளம்பெண்கள் கடத்தப்பட்டு பச்சை ஆற்றின் அருகே கொல்லப்பட்டு கிடந்தனர். கொலை அடுத்தடுத்து நடைபெற, காவல்துறைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிகாரிகள்,   கொலையாளி

என்னை அறிந்தால், மகனையும் கொல்வேன் - கேரி ரிட்ஜ்வே 2

படம்
அசுரகுலம் கேரி ரிட்ஜ்வே ஆற்றில் விடப்பட்ட சடலங்களை ஆராய்ந்து, அதைச் செய்வதற்கான வாய்ப்புள்ள குற்றவாளிகளின் பட்டியலை காவல்துறையின் டாஸ்க் ஃபோர்ஸ் தயாரித்தது. இதில் சீரியல் கொலைகாரர் டெட் பண்டியிடம் செய்த விசாரணையில் கிடைத்த தகவல்படி, கொலைகாரர் தனக்கு செல்வாக்கான தெரிந்தவர்களின் வட்டத்தில் கொலை செய்வார் என்ற ட்ரிக் ஏனோ கேரி விஷயத்தில் வேலைக்கு ஆகவில்லை. 1980ஆம் ஆண்டு போலீஸ் கேரியைப் பிடித்தது. கேஸ் என்ன தெரியுமா? செக்ஸ் செய்யும்போது, விலைமாதின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார் கேரி என்பதுதான். ஆனால் கேரி அலட்டிக்கொள்ளவே இல்லை. பாலுறவின்போது, திடீரென அவள் என்னை தாக்க முயன்றால், தற்காப்பிற்காக கழுத்தைப் பிடித்தேன் என்றார். நடந்த சம்பவத்தை திருட்டு, கொலை போல செய்து காட்ட முடியுமா? கற்பனை செய்து பார்த்த போலீஸ் அதிலுள்ள லாஜிக்கை டிக் அடித்துவிட்டு கிளம்பு என சொல்லிவிட்டார்கள். அதற்கு பிறகு சீ டாக் எனும் அப்பகுதியில் நிறைய பெண்களை சடலமாக எடுத்தும் கேரி மீது அணுவளவும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. 1983ஆம் ஆண்டு கேரியின் டிரக், ஆபாசமாக ஆடியது. அங்கு ரோந்து வந்த போலீஸ் அதனைத்