என்னை அறிந்தால், மகனையும் கொல்வேன் - கேரி ரிட்ஜ்வே 2





Image result for gary ridgway




அசுரகுலம்

கேரி ரிட்ஜ்வே

ஆற்றில் விடப்பட்ட சடலங்களை ஆராய்ந்து, அதைச் செய்வதற்கான வாய்ப்புள்ள குற்றவாளிகளின் பட்டியலை காவல்துறையின் டாஸ்க் ஃபோர்ஸ் தயாரித்தது. இதில் சீரியல் கொலைகாரர் டெட் பண்டியிடம் செய்த விசாரணையில் கிடைத்த தகவல்படி, கொலைகாரர் தனக்கு செல்வாக்கான தெரிந்தவர்களின் வட்டத்தில் கொலை செய்வார் என்ற ட்ரிக் ஏனோ கேரி விஷயத்தில் வேலைக்கு ஆகவில்லை.


1980ஆம் ஆண்டு போலீஸ் கேரியைப் பிடித்தது. கேஸ் என்ன தெரியுமா? செக்ஸ் செய்யும்போது, விலைமாதின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார் கேரி என்பதுதான். ஆனால் கேரி அலட்டிக்கொள்ளவே இல்லை. பாலுறவின்போது, திடீரென அவள் என்னை தாக்க முயன்றால், தற்காப்பிற்காக கழுத்தைப் பிடித்தேன் என்றார். நடந்த சம்பவத்தை திருட்டு, கொலை போல செய்து காட்ட முடியுமா? கற்பனை செய்து பார்த்த போலீஸ் அதிலுள்ள லாஜிக்கை டிக் அடித்துவிட்டு கிளம்பு என சொல்லிவிட்டார்கள். அதற்கு பிறகு சீ டாக் எனும் அப்பகுதியில் நிறைய பெண்களை சடலமாக எடுத்தும் கேரி மீது அணுவளவும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

1983ஆம் ஆண்டு கேரியின் டிரக், ஆபாசமாக ஆடியது. அங்கு ரோந்து வந்த போலீஸ் அதனைத் தட்டி உள்ளே யாரென்று பார்த்தது. கெல்லி மெக்கின்னஸ் என்ற பெண்ணுடன் சரசம் சல்லாபம் செய்து கொண்டிருந்த கேரி, பதற்றத்துடன் பேண்ட் ஜிப்பை இழுத்து விட்டுக்கொண்டு இறங்கினார். மேலோட்டமாக விசாரித்து விட்டு போலீஸ் கிளம்பிவிட்டது. ஐந்து நிமிடத்தில் அவிழ்த்துவிடும் உடையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் பின்னர், கேரி கொன்றார். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அன்டர்கவர் பெண் போலீசையும் தன் இடுப்புக்கு கீழே அமுக்க நினைத்தார். நல்ல நேரம், ஆண் போலீஸ்கள் வந்து பெண் போலீசின் கற்பைக் காப்பாற்றியது. அவர் மீது சந்தேகம் வந்து பாலிகிராப் டெஸ்ட் வைத்தது. பீகார் பிட் மாணவர்கள் போல சிம்பிளாக டெஸ்டில் பாஸ் செய்து குற்றத்தை களைந்தார்.


டாஸ்க் ஃபோர்ஸ் எடுத்த லிஸ்டில் உள்ள ஆட்களை கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வந்தனர். அதில் கேரியும் ஒருவர். அவர் லீவு எடுத்த நாட்களில் எல்லாம் பெண்கள் காணாமல் போயிருந்தனர். உடனே ஐந்து மூன்றும் ஒன்பது என கணக்குப்போட்டு கேரியை போலீஸ் விசாரணைக்கு அழைத்தது. அவரது வீட்டையும் சோதனை செய்தது. எச்சில், முடி சாம்பிள் எடுத்துக்கொண்டு அவரை திருப்பி அனுப்பிவிட்டது. பின்னே, கைது செய்த உறுதியான ஆதாரம் வேண்டுமே? இந்த சம்பவம் நடந்தது 1987ஆம் ஆண்டு.

பின்னர் 2001 இல் டிஎன்ஏ சோதனைகளின் படி கேரி மாட்டிக்கொண்டார். டிடெக்டிவ்கள் அவரது வரலாற்றை அலசி உலர்த்தி காயப் போட்டனர். அவரது மனைவிகள், பெண் தோழிகள் ஆகியோரிடம் விசாரணை செய்து கேரிதான் குற்றவாளி என முடிவு செய்தனர்.  ஆதாரங்கள் உறுதியான பிறகு, விசாரணைக்கு அவர் காவல்துறைக்கு ஒத்துழைத்தார்.


இறுதியில் அவருக்கு நினைவு தெரிந்த வரையில் 48 பெண்களை கொலை செய்த தாக ஒப்புக்கொண்டார். சிலசமயம் 73 என்று சொன்னாலும் அவருக்கு நினைவுகளில் இருந்தது நாற்பதிற்கும் மேலான கொலைகள்தான். கழுத்தை நெரித்து கொலை செய்வது கேரியின் பாணி. துணியால் கழுத்தை இறுக்கிக் கொன்றேன் என அவரே கூறி இருக்கிறார். தன் மகனை வண்டியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு கூட கொலை செய்யும் பணியில் இருந்திருக்கிறார். உங்கள் மகன் நீங்கள் செய்யும் கொலையைப் பார்த்துவிட்டால், பார்த்திருந்தால் என்ன செய்வீர்கள்? புன்னகையுடன் கேரி சொன்ன பதிலைக் கேட்டு காவல்துறை மிரண்டது. அங்கேயே அவனைக் கொன்றிருப்பேன் என்றார்.

கொலைகளை ஒப்புக்கொண்டதால் கேரிக்கு 480 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. தற்போது வாலா வாலா விலுள்ள வாஷிங்டன் சிறையில் உள்ளார்.

தொகுப்பு - வின்சென்ட் காபோ

நன்றி - தாட்.காம்.

கில்லர்ஸ் புக்.

மர்டர்பீடியா




பிரபலமான இடுகைகள்