விண்வெளியில் குழந்தைகள் பிறக்குமா?




Image result for dr egbert edelbroek


நேர்காணல்

டாக்டர் எக்பர்ட் எடில்புரோக்


விண்வெளியில் குழந்தை பிறக்கும் என்கிறீர்களே எப்படி சாத்தியம்?


பதினைந்து ஆண்டுகளில் சாத்தியம். ஐவிஎஃப் முறையில் குழந்தைகளை விண்வெளியில் பிறக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம். இச்சோதனைகளை ஐந்து ஆண்டுகளில் முடித்தால், விரைவில் குழந்தைகளை நாங்கள் விண்வெளியில் பெற முடியும் என நிரூபிப்போம்.

நாங்கள் சொல்வதை நீங்கள் பேராசை என்று கூட நினைக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. குழந்தை அங்கு பிறக்கவில்லையென்றால், உங்களால் அங்கு வாழவும் முடியாது. எனவே இதற்கான தீர்வுகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். நிச்சயம் நீங்கள் கேலி செய்வீர்கள். ஆனால், மருத்துவம் ரீதியாக பல்வேறு தடைகள் இருக்கின்றன. இவற்றையும் தாண்டி நாங்கள் சாதிப்போம்.

பெண்களை அதுவும் கர்ப்பிணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது ஆபத்தானது இல்லையா?

நிச்சயம் ஆபத்து உள்ளது. ஆனால் நாம் இந்த சோதனையை செய்யாமல், குழந்தைகளை பிறக்க வைக்க முடியாது. இதுவும் இப்போதே நடைபெறப்போவது இல்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் இவை நடந்தேறும். படிப்படியாக நாங்கள் இதைச் செய்கிறோம்.

எப்படி இதற்கான ஆட்களை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்?

நாங்கள் இன்னும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஏனெனில் இதற்கான காலம் நிறையவே உள்ளது. விரைவில் இதற்கான ஆட்களை தேர்வு செய்து பயிற்சி கொடுக்க உள்ளோம். இந்த விஷயம் ஊடகங்களில் கசிந்தவுடன் பல்வேறு பெண்கள் எங்களை தொடர்பு கொண்டு பேசினார்கள். ஆனால் அவர்களிடம் நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம். இப்போது நாங்கள் ஆட்களை எடுக்கவில்லையென்று. ஊடகங்கள் ஆர்வம் காட்டும் அளவுக்கு நாங்கள் இந்த விவகாரத்தில் வேகமாக இல்லை என்பதே உண்மை.

மனிதர்களை அனுப்பாமல் எப்படி கருவுறுதல் சோதனைகளை செய்யப்போகிறீர்கள்?

நாங்கள் விலங்குகளை வைத்து சோதனை செய்து பார்த்துவிட்டோம். அடுத்த தகுதியான மனிதர்களை வைத்து செய்யவேண்டியதுதான். இதற்கான ஐவிஎஃப் மாடல்களில் பல்வேறு மாற்றங்களை செய்யவேண்டி உள்ளது. இதனைச் செய்து அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனைகளை பெற்றுத்தான் இயங்கி வருகிறோம். விண்வெளிக்கான விதி, ஆய்வுக்கான விதி ஆகியவற்றையும் நாங்கள் தீர்க்கமாக பின்பற்றி வருகிறோம்.

நன்றி - பிபிசி ஃபோகஸ்