2019 டிரெண்டுகள் என்ன? பகுதி 1




trending GIF by StickerGiant
giphy




இன்புளூயன்சர்கள்

இந்த வார்த்தையை அறிமுகம் செய்த து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட சமூக வலைத்தளங்கள்தான். இம்முறையில் இவர்கள் நவீனமான விளம்பர தூதர்களாக செயல்பட்டு ஆச்சி இட்லி மிளகாய் பொடி முதல் கார்கள் வரை விளம்பரம் செய்து சம்பாதித்தார்கள்.


கவிதை நேசர்கள்

இம்முறை இலக்கியவாதிகளின் கவிதைகளை தாண்டி சாமானியர்களும் கவிதை பாடினார்கள். இதில் சிம்பிளாக அவர்களின் உறவு, பிரச்னைகள் ஆகியவை கவிதையாக வெளிவந்தன. நன்றாக இருந்த தோ இல்லையோ உலகம் இதை ரசித்து பாராட்டியது. இதற்கு முக்கியக் காரணம், நகரங்களில் உருவாகியுள்ள கிளப்புகள்தான். இங்குதான் ஓபன் மைக் சங்கதிகளில் இந்த கவிதைகளைப் பாடி இளைஞர்கள் குதியாட்டம் போட்டனர். இவை உடனுக்குடன் வைரலும் ஆனது.


மொபைலே தியேட்டர்

இந்தியர்களுக்கு எம்எக்ஸ் பிளேயர் கிடைத்தது, அதிலும் நெட்ஃபிளிக்ஸ் படங்கள் மாதம் 199 ரூபாய்க்கு கிடைத்தால் போதாதா? வார இறுதியில் தங்கள் நண்பர்களை விட போனுடன் கழித்த நவீன இளைஞர்கள் அதிகம். பார்க்கிங், பாப்கார்ன் செலவு பற்றி கவலைப்படாமல் வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வசதி செய்து அமேசான், நெட்ஃபிளிக்சுக்கு படம் கட்டிய பெருமூச்சு விட்ட குடும்பஸ்தர்கள் இந்தியாவில் அதிகம்.


எல்லாமே இமோஜிதான்

பேசுவதற்கே நேரம் கிடையாது. அந்தளவு போனில் படம் பார்த்து காமெடி பார்த்து இபுக் படித்தபடி இளைஞர்கள் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஜெயமோகன் ரேஞ்சுக்கு உரைநடை எழுதிக்கொண்டிருக்க ஜென் இசட்டுக்கு முடியுமா? மனம் நோகுமே. அதற்குத்தான் இமோஜி உருவானது. சிம்பிளாக ஜாலியாக தன் மன உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டு போய்க்கோடா என்று சென்றுகொண்டிருந்தனர் இளைஞர்கள் கூட்டம். பயன்படுத்தியவர்கள் பலரும் எழுத்தை விட இமோஜிக்கு வாக்களித்து வெற்றிப்பெறச் செய்தனர்.


போலிச்செய்திகள்


மேற்குலகில் டிரம்ப் என்றால் இந்தியாவுக்கு மோடி. 2004 முதலாக போலிச்செய்திகளை உருவாக்குவதில் மோடி, அமித் ஷா குழுவினர் தீவிரமாக செயல்பட்டு சாதனை செய்து வருகின்றனர். இவர்களின் டிஜிட்டல் ஆர்மி வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவற்றை திறமையாக கையாண்டு இம்முறையும் சிறுபான்மையினர் மீதான வன்முறையைத் தூண்டி விட்டனர். இதில் அப்பாவி மக்கள் பலியானார்கள்.


செல்பீ, குரூபீ

தனியாக எடுத்தால் செல்பீ, கூட்டமாக சேர்ந்து எடுத்தால் குரூபி. உலகமே பரோட்டா போடும் மாஸ்டர் முதற்கொண்டு கபாலி கோவில் பூசாரி வரை செல்பீ எடுத்து வரலாற்று சுவடுகளை டிஜிட்டல் சுவரில் பதிய முயன்றனர். இதில் பல பரிதாபகரமான மரணங்களும் நிகழ்ந்தன. ஆனால் ஜென் இசட் அதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா என்று இன்றும் வளைத்து வளைத்து செல்பீ எடுத்து தள்ளி வருகின்றனர். அதிலும் சல்லிசமான விலையில் ஜியோமி கிடைக்க, கரகோஷத்துடன் இளைஞர்கள் செல்பீ மழையை பொழிந்துவிட்டனர்.


சுதேசி ஹிப்ஹாப்

இன்னும் எத்தனை நாள்தான் பாரின் ஆட்களின் ஹிப்ஹாப் குத்துக்களைக் கேட்பது? இந்த ஆண்டு இந்தி திரைப்பட உலகில் பாட்ஷா, டிவைன் உள்ளிட்டோர் ஏராளமான பாடல்களை பாடி ஈர்த்தனர். குரு ரான்தவா போன்றோரின் பாடல்கள் ரசிகர்களை கிறுக்குப்பிடிக்க வைத்தன.


என்பெயர் பச்சை

அமைதியாக போராடிய சூழலியலாளர்கள் கிரேட்டா கொடுத்த தைரியத்தில் ஒன்று திரண்டனர். இந்தியாவில் ரித்திமா, கிரேட்டாவை அடியொற்றி செயல்பட்டார். சூழலிய் சார்ந்த கவனம் தீவிரமாக இளைஞர்களிடம் காணப்பட்ட ஆண்டு. லண்டன் முதல் இந்தியா வரை பல்வேறு நாடுகளிலும் சூழல் பாதிப்புக்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

அனைத்தும் எலக்ட்ரிக் மயம்

இந்திய அரசு அனைவரும் பேட்டரி காரில் ஏறியே ஆகவேண்டும் என்று அடம் பிடித்து கொள்கைகளை வகுத்தது. பெட்ரோல், டீசல் விலைகள் திகுதிகுவென ஏற, பேட்டரி கார்களை வாங்க மக்கள் நினைத்தார்கள். ஆனால் அந்த வாகனங்களோ லட்சங்களில் விலை தொடங்க பாரத் ஸ்டேஜ் 6 இல் ஹோண்டா பைக் வாங்கி ஆசுவாசமானது இந்தியக்குடும்பங்கள். டெஸ்லா 2020 இல் எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் விற்கும் வாய்ப்பு உள்ளது.

நன்றி - டைம்ஸ் 28, 2029