பில்கேட்ஸிற்கு பிடித்த புத்தகங்கள்!





ஆளுமைகள் என்ன படித்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள நினைப்போம். சிலர், அவர்கள் என்ன படித்தார்களோ அதை அப்படியே படித்து டெவலப் ஆவோம் என நினைப்பார்கள். சரியோ, தவறோ நூலில் படித்து தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆண்டுதோறும் பில்கேட்ஸ் தான் படித்த நூல்களை மக்களிடம், ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்வார்.

அப்படி சில நூல்களை இந்த ஆண்டும் படித்ததாக கூறினார்.

An American Marriage, Tayari Jones


அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வாழும் கருப்பின தம்பதிகளின் காதல் வாழ்க்கையை பேசும் நாவல். பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால் கருப்பினத்தவர் ஒருவருக்கு அவர் செய்யாத குற்றத்திற்கு விதிக்கப்படும் தண்டனை அவர் வாழ்க்கையை எப்படி சிதைக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். பெரிய நூல்களைப் படிக்கும்போது கூடவே இது போன்ற மென்மையான நாவல்களை படிக்கவேண்டும் என்கிறார் கேட்ஸ்.



These Truths: A History of the United States, Jill Lepore

அமெரிக்காவின் வரலாற்றில் அந்நாட்டை அசைத்துப் பார்த்த வரலாற்று நிகழ்வுகளை நியூயார்க்கர் பத்திரிக்கையின் பத்திரிகையாளர் ஜில் தொகுத்துள்ளார். நான் படித்த வரலாற்று நூல்களிலேயே அழகாகவும், நன்றாகவும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் ஒன்று. உங்களுக்கு சிறப்பான நம்பிக்கையையும் தரும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது என்கிறார் கேட்ஸ். 
Growth: From Microorganisms to Megacities, Vaclav Smil
மனிதர்கள், செடிகள் எப்படி வளர்கிறார்கள் என்பதை அறிவியல் மொழியில் விளக்கியுள்ள நூல். எனவே, உடனே கடினமாக இருக்கிறதென படிப்பதை கைவிட்டுவிடாதீர்கள். முக்கியமான தொழில்துறை ஆளுமைகள் எப்படி உருவானார்கள் என்பதை இந்த நூல் படித்தால் அறிந்துகொள்ளலாம் என்று சொல்லுகிறார் கேட்ஸ். 

Prepared: What Kids Need for a Fulfilled Life, Diane Tavenner

அடுத்து வரும் காலங்களில் படிப்பதற்கும், வேலை வாய்ப்புகளுக்கும் மாணவர்களை எப்படி தயாரிப்பது பற்றிய ஆலோசனைகளை சொல்லும் புத்தகம். டயனே கல்வி சார்ந்த நிறைய நூல்களை எளிமையாக எழுதி வருகிறார். அவரின் இந்த நூலும் அந்த வகையில் முக்கியமானது என்கிறார் கேட்ஸ். 


நன்றி - டைம் இதழ் 

  

பிரபலமான இடுகைகள்