தெலுங்குமொழியை தலித்துகள் காப்பாற்ற வேண்டியதில்லை!
தலித் மாணவர்கள்தான் தெலுங்கு மொழியை காப்பாற்ற வேண்டுமா என்ன?
அண்மையில் ஆந்திர அரசு, தம் பள்ளிகளில் பயிற்று மொழியாக தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவதாக அறிவித்தது. உடனே அதுதொடர்பான சர்ச்சைகளும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. இதற்காக கல்வி அமைச்சர் ஆதிமுலப்பு சுரேஷ் அவர்களை சந்தித்தோம்.
அனைத்து பள்ளிகளிலம் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக கொண்டுவந்தால் தெலுங்கு மொழி பாதிப்புக்கு உள்ளாகாதா?
ஆந்திரத்தில் 98.5 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியையைப் படிக்கின்றனர். பதினொரு லட்சம் மாணவர்கள் சக்சஸ் பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர கிராம பகுதிகளில் உள்ள பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆங்கில வழி கல்வியால் பயன்பெறுவார்கள்.
நாளை இவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு கல்வி உதவ வேண்டுமே? தாய்மொழியான தெலுங்கு மொழி அழிக்கப்படுகிறது என்று விமர்சிப்பவர்களை நாங்கள் கண்டுகொள்ளப்போவதில்லை. அதனைக் காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளை நாங்கள் வேறுவழிகளில் செய்வோம். இதற்கு பயந்து தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலத்தை பலியாக்க முடியாது. நாங்கள் அனைத்து சமூக மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவதையே குறிக்கோளாக கொண்டுள்ளோம்.
மாநில முதல்வர் கிறித்துவ மதத்தை தழுவியவர் என்றும், அம்மத த்தை பரப்பவே இதுபோன்ற ஆங்கில வழிக்கல்வி முயற்சியை செய்வதாக கூறுகின்றனரே?
கல்விக்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இந்த முயற்சியில் இல்லை. இப்படி பேசுபவர்கள் முட்டாள்கள். தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களை தங்களின் கால்களுக்கு கீழேயே வைத்திருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். இன்று தெலுங்கு மாணவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் எப்படி வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன? அவர்களின் ஆங்கில அறிவு மற்றும் தொழில்நுட்ப திறன்கள் காரணமாக. அவர்களின் மதம் சார்ந்து கிடையாது., இப்படி விமர்சிப்பவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை உருக்குலைக்கும் ஜந்துகள் அவ்வளவுதான்.
திடீரென ஆங்கில வழிக்கல்வி ஆணையை அரசு பிறப்பித்துள்ளதே? தொடக்க பள்ளியிலிருந்து இதனை செயல்படுத்த முடியுமா?
2024 இல் பள்ளியிலிருந்து தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டு வெளியே வருபவர்கள் உலகின் சவால்களை சந்திக்க முடியுமா? அதற்காகத்தான் ஆங்கில மொழியை பயிற்று மொழியாக்கும் உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார். உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியம் என்றாலும், இதற்காக நாங்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு பல்வேறு விஷயங்களை யோசித்து இதனை செய்துள்ளோம்.
தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில மொழி என்பது கடினமாக இருக்காதா?
12 வயதுக்குள்ளாக உள்ள மாணவர்களால் ஆறு மொழிகளைக் கற்கமுடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. எனவே நாங்கள் ஆங்கில மொழியை பயிற்று மொழியாக்க உள்ளோம். தாய்மொழியான தெலுங்கை பலப்படுத்தும் முயற்சிகள் தனியாக நடைபெறுகின்றன. கடந்த 23 ஆண்டுகளாக மாநில பாடத்திட்டம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒரே மாதிரி இருக்கிறது. இப்படிய இருந்தால் மாணவர்கள் முன்னேறுவது கடினம். இதற்காக சிபிஎஸ்இ, ஐசிஎஸ் இ பாடத்திட்டங்களைப் பார்த்து சில அம்சங்களை மாற்றி குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் முயற்சிகளை செய்து வருகிறோம்.
நன்றி – டைம்ஸ் டிச. 27, 2019
எம்.என். சோம்தானி