அரசியலமைப்பு வலியுறுத்தும் உரிமைகள், கடமைகள்!




Image result for indira gandhi



அரசியல் அமைப்புச்சட்டம் வலியுறுத்தும் அடிப்படை உரிமைகள் என்னவென்று அறிவீர்களா? அதைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். சர்வாதிகார அரசு என்பது உலகின் பல பாகங்களிலும் ஜனநாயகம், மக்களுக்கு உரிமைகள் என்ற கோஷங்களைப் போட்டபின்னரே சர்வாதிகாரத்தை அமல்படுத்துகின்றன. எவை தம்மை வெல்லச் செய்ய உதவினவோ அதனை பிறருக்கு கிடைக்காமல் செய்ய அனைத்து அரசுகளும் முயன்றுள்ளன. இதனை அரசியலமைப்பு சட்டப்படி செய்தோம் என்பார்கள்.

அரசியல் அமைப்புச்சட்டம் 51 ஏ படி பதினொரு உரிமைகள், கடைபிடிக்க வேண்டிய விதிகள் கூறப்படுகின்றன. 2002இல் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் 82 ஆவது சட்டத்திருத்தமாக இதில் சில விதிகளில் மாறுதல்கள் செய்யப்பட்டன.

தேசிய கீதம், தேசியக்கொடி ஆகியவற்றை அரசியலமைப்புசட்ட விதிப்படி மதிக்க வேண்டும் . நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.

நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, பெருமை ஆகியவற்றை இந்தியாவின் கீழுள்ள அனைத்து மாநிலங்களிலுள்ள மக்களும் கடைபிடிக்கவேண்டும்.

நம் நாடு பல்வேறுபட்ட கலாசாரத்திற்கு புகழ்பெற்றது. அதற்கு களங்கம் ஏற்படுத்தும்படியான செயல்பாடுகளை செய்யக்கூடாது. மேலும், அரசுக்கும் தேவைப்படும் போது குடிமக்கள் அதன் சேவையில் பங்குகொள்வது கட்டாயம்.

நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பது குடிமகன்களின் தனித்துவமான கடமை. மேலும், பொதுச்சொத்துக்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பதும் அவற்றை பராமரிப்பதும் மக்களின் கடமை.

பெற்றோர் தம் மகன்களை ஆறு வயதிலிருந்து பதினான்கு வயதுவரை பாதுகாக்க வேண்டும். இக்காலகட்டத்தில் அவர்களுக்கு கல்வியுடன் அடிப்படைத்தேவைகளையும் அவர்கள் நிறைவு செய்யவேண்டும். 1976ஆம் ஆண்டு இந்திரா காந்தி மேற்சொன்ன கடமைகளை அவர் சேர்த்தார். பின்னர் இதில் மாறுபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

எமர்ஜென்சி நிலையின்போது உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற சட்டத்திருத்தம் அமலானது. அதுதான் மிசா இதில்தான் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அடித்து உதைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கும் சித்திரவதைகள் தொடர்ந்தன. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி, எமர்ஜென்சிக்கு முந்தைய அரசியலமைப்புச்சட்டத்தை கொண்டு வருவதாக கூறியது. ஆனால் உதிரியாக சில சட்டங்களை மட்டுமே அவர்கள் மாற்ற முடிந்தது. காரணம், உறுதியில்லாத அரசு மற்றும் நீதிமன்றங்களின் தலையீடு அதிகம் இருந்தது.


நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ் - அபந்திகா கோஷ்