வாவ் சொல்ல வைக்கும் ஆப்ஸ்கள் - 2019





Image result for spectra camera app






ஸ்பெக்ட்ரா கேமரா

இது ஐபோனுக்கான ஆப். அழுக்கான சூழலிலும் பளிச்சென புகைப்படம் எடுக்க உதவும் ஆப். ட்ரைபாட் இல்லாமல் சிறப்பான ஷேக்கிங் இல்லாத படங்களை எடுக்கலாம். மேலும் எந்த கூட்டத்திலும் உங்களுக்கு தேவையான ஆட்களை மட்டும் தனியாக பிரித்தெடுக்கும் ஏ.ஐ நுட்ப வசதி இந்த ஆப்பில் உண்டு. அதனால்தான் ஆப்பிள், இந்த ஆப்பிற்கு ஆப் ஆப் தி இயர் என்ற விருதைக் கொடுத்து கௌரவித்துள்ளது.

மூன்று பௌண்டுகள் கொடுத்துத்தான் இதை நீங்கள் வாங்க வேண்டும்.

அஃபினிட்டி பப்ளிசர்

அடோப் இன்டிசைனுக்கு நிகரான வேறு ஆப்களை தேடுகிறீர்களா? உங்களுக்காகத்தான இந்த ஆப் உதவுகிறது. ஏராளமான டூல்கள் உண்டு. உங்களுக்கு புத்தகங்களை வடிவமைப்பதில் ஆர்வம் உண்டா, சந்தேகமே வேண்டாம் உடனே இதனை காசு கொடுத்து வாங்கி பின்னி எடுங்கள். ஆப்பிள் நிறுவனம் இந்த ஆப்பிற்கும் விருது வழங்கி பாராட்டியுள்ளது.

விலை - 48 பௌண்டுகள்


ஜம்போ

இலவச ஆப்தான். ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் கிடக்கும் குப்பைகளை நித்ய கர்மவாசியாக சுத்தம் செய்கிறது. தேவையில்லாத விளம்பரங்கள், உங்களை பின்தொடரும் ஆப்களை துடைத்தெறிய ஜம்போ உங்களுக்கு உதவும்.


புரோகிரியேட்

ஓவியர் பாலமுருகன் போல நீங்களும் ஓவியங்களை வரைந்து உலக அளவில் புகழ்பெறவேண்டுமா? அதற்குத்தான் இந்த ஆப். இப்போது ஐபேட், ஐபேட் புரோவிலும் மட்டும்தான் பயன்படுத்த முடியும். கலைஞர்கள் போனிலும், டேபிலும் கூட உருவாக முடியும் என்பதை நிரூபிக்க பலரும் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து உழைத்து வருகிறார்கள். நீங்களும் முயலுங்கள்.


விலை - 9 பௌண்டுகள்



குட் டாஸ்க்

விஷயங்களை லிஸ்ட் போட்டு வைத்து உழைத்தால்தானே 2020 இல் உலகையே வெல்ல முடியும். அதற்காகத்தான் இந்த ஆப். என்ன செய்யவேண்டும், செய்யப்போவது என்ன, சந்திப்புக்காக நேரம், நிகழ்ச்சி நிரல்களை குறித்து வைத்து காலண்டரோடு இணைத்தால் போதும். சிறந்த வெற்றியாளராக நீங்கள் வந்துவிடுவீர்கள். அதற்குத்தான் இந்த ஆப்பை நீங்கள் நிறுவ வேண்டும். இந்த ஆப் ஐபோனுக்கானது.

விலை - 9 பௌண்டுகள்

ஃபாரஸ்ட்

நிலத்தில் மரக்கன்றுகளை, மரப்போத்துகளை ஊன்றி அதற்கு நீர்விட்டு பராமரிப்பது எல்லாராலும் முடியுமா? அதற்குத்தான் இந்த ஆப். இதில் நீங்கள் டிஜிட்டல் முறையில் மரம், செடி என பலவற்றையும் வளர்க்கலாம். மெல்ல அவற்றை காடுகளாக்கலாம். மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொள்ள இந்த ஆப் உதவும்.

விலை - 2 பௌண்டுகள்


வுபோரியா சால்க்

வணிக ஆட்களுக்கான ஆப். மைக்ரோசாப்டின் ஹோலோ லென்ஸ் போலவே செயல்படுகிறது. குறிப்பிட்ட வணிக வளாகத்தின் மீது அல்லது பொருட்களின் மீது காட்டினால் அது பற்றிய விளக்கம், விலை ஆகியவை கிடைக்கும். இலவசம்தான் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

நன்றி - கிரியேட்டிவ் பிளாக்