இந்திய அரசிடம் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை!




Twins, Boys, Babies, Sucklings, Newborn, Male, Together

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம்!



டிஜிட்டல் இந்தியா என்ற நாளிதழ்களில் விளம்பரம் செய்தாலும், இந்தியா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விஷயங்களில் தடுமாறி வருகிறது. அண்மையில் வெளியான உலகளவிலான பட்டினி நாடுகளின் தொகுப்பு பட்டியலில் இந்தியா 102 வது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 112 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் இந்தியாவின் இடம் பரிதாபகரமானது. தெற்காசிய நாடுகளில் மிகவும் கீழே சரிந்துள்ளது இந்தியா. போஷன் அபியான் திட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சந்திரகாந்த் எஸ் பாண்டேவிடம் இதுபற்றி பேசினோம்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஆறு மாவட்டங்கள் தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளன. அதனைத் தீர்க்க என்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள். 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊட்டச்சத்து பிரச்னை கொண்ட மாவட்டங்கள் நாங்கள், இதற்கான குழுக்களை அமைத்து இப்பிரச்னையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்.

இதற்கான களப்பணியில் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்?

நாங்கள் என்ஆர்சி எனும் மையங்களை அமைத்து ஊட்டச்சத்து பற்றாக்குறையான குழந்தைகளை பராமரித்து அவற்றை நீக்க முயற்சித்து வருகிறோம். இந்த மையங்களை விட மக்களின் குழுக்கள் அளவிலயே இப்பிரச்னையை தீர்க்க முயல்கிறோம். மையங்களுக்கு வருவது செலவு பிடிக்க கூடிய ஒன்று. இது அத்தனை பேர்களுக்கு சிறப்பான தீர்வுகளை அளிக்க கூடியதல்ல.

ஊட்டச்சத்து பட்டியலில் இந்தியா மிகவும் கீழான இடத்திற்கு சரிந்துவிட்டதே?

தேசிய குடும்ப நல ஆய்வு 2018-19 இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த ஆய்வு முடிவுகள் இந்தியாவில் உள்ள சரியான நிலையைக் காட்டியிருக்கும். தற்போது நாம் செயல்படுவது, 2015-16 காலத்தில் எடுத்த முடிவுகளை வைத்துதான். இதனால் அரசு எடுத்த பல்வேறு திட்டங்களின் பயன்களை முழுமையாக நாம் காண முடியவில்லை.

நன்றி – டைம்ஸ் நவ.21, 19
ருத்ரநீத் கோஷ்