ஆதாம் ஆப்பிள் பெரிதாக இருப்பது ஏன்?



Animated GIF
giphy

மிஸ்டர் ரோனி


என்னுடைய தொண்டையில் ஆதாம் ஆப்பிள் பெரிதாக உள்ளது? இதனை சரி செய்ய முடியுமா?

எடுத்து நாயுடு ஹோட்டல் வறுகறிக்கு கொடுத்துவிடப்போகிறீர்களா என்ன? ஆண்டவன் கொடுத்ததை அப்படியெல்லாம் எதையும் மாற்றமுடியாது. தைராய்டு அமைப்புக்கு அருகில் உள்ளது ஆதாம் ஆப்பிள். குரல் அமைப்பை பாதுகாக்க ஒன்பது அமைப்புகள் அடுத்தடுத்து உள்ளன. இதில் தைராய்டு அமைப்பின் மீதாக பெரிதாக இருக்கிறது. ஆண்களுக்கு உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிக்கும்போது, தொண்டை அமைப்பு பெரிதாகிறது. குறிப்பாக குரல் மாறுபடுவதோடு அதன் மீதுள்ள ஆதாம் ஆப்பிளின் அளவு பெரிதாகிறது. இந்த அளவு மரபணு சார்ந்தது. இதை மாற்றுவது என்பது கடினம். ஆண்களுக்கு இந்த அமைப்பு பெண்களை விட தெளிவாக தெரியும்.

நன்றி - பிபிசி

பிரபலமான இடுகைகள்