இடுகைகள்

நேர்காணல்- சூழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்:"யானைகள் பயிர்களை அழிப்பது இயல்பானதுதான்"

படம்
முத்தாரம் நேர்காணல் "யானைகள் பயிர்களை அழிப்பது இயல்பானதுதான்" ராமன் சுகுமார் , சூழலியலாளர் . தமிழில் : ச . அன்பரசு   ஆசிய யானைகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ராமன் சுகுமாரின் ஆய்வுக்கட்டுரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நூலாக (1989) வெளியாகி உள்ளது . சிகாகோ உயிரியல் சங்கத்தின் பரிசு பெற்றுள்ள ராமன் சுகுமார் , மனிதர்களுக்கும் யானைகளுக்கிடையேயான முரண்பாடுகளை பற்றி கட்டுரைகளும் , நான்கு நூல்களையும் எழுதியுள்ளார் . இந்திய அறிவியல் கழகத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் . யானைகள் பாதுகாப்பில் உங்களுக்கு எப்போது ஆர்வம் ஏற்பட்டது ? நான் சிறுவயதில் சென்னை மற்றும் மும்பை நகரங்களில் வளர்ந்தேன் . முதலில் ஆர்வம் ஏற்பட்டது , விண்வெளி மற்றும் டெக்னாலஜி தொடர்பாகத்தான் . விமானி அல்லது ஆராய்ச்சியாளர் என்பதுதான் என் பால்ய லட்சியம் . பதினாறு வயதில் அடையாறில் வசித்தபோது , ரேச்சல் கார்சனின் Silent spring, ஜேன் குட்ஆலின் In the Shadow of Man, ஜார்ஜ் ஹாலரின் the deer and tiger ஆகிய நூல்களை வாசி