இடுகைகள்

நம்பிக்கை மனிதர்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இசை மூலம் ஏழை மாணவர்களுக்கு இசைக்கல்வி அளிக்கும் தொண்டு நிறுவனம்! - தி சவுண்ட் ஸ்பேஸ், மும்பை

படம்
      cc             மும்பையைச் சேர்ந்த தி சவுண்ட் ஸ்பேஸ் என்ற அமைப்பு , ஏழை மாணவர்களுக்கு இசை பாடங்களை நிதி சேகரித்து நடத்தி வருகிறது . இசையைப் பொறுத்தவரை என்ன சொல்லுவார்கள் ? இசை பயில்வது , கேட்பது ஒருவரின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் . அவர்களின் மோசமான இயல்புகளை மாற்றும் என்றுதானே ? நாம் பல ரும் கேட்ட விஷயம்தான் . ஆனால் அதனை அனுபவத்தில் உணர்ந்த உண்மையாக பரவசத்துடன் சொல்லுகிறார் தி சவுண்ட் ஸ்பேஸ் அமைப்பின் நிறுவனர் விஷாலா குரானா . சுதந்திர தினத்தன்று இவர்கள் இசைக்கச்சேரி ஒன்றை நிதிதிரட்டவென நடத்துகிறார்கள் . இணையம் மூலம் இதனை பலரும் பார்க்கலாம் . இந்த நிகழ்ச்சி மூலம் பெறப்படும் நிதியை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் இசைப்பாடங்களை பயில பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் . இதன்மூலம் ஆகான்சா பௌண்டேஷன் , ஜெய் வகீல் பௌண்டேஷன் , சேவா சதன் சொசைட்டி ஆகிய அமைப்புகள் பயன்பெறுகினனன . ஏறத்தாழ ஆயிரம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இம்முறையில் பயன்பெறுகின்றன என்று விஷாலா கூறுகிறார் . நாங்கள் இனக்குழு ரீதியாக இசை முக்கியமான சக்தி என நம்புகிறோம் . இதன்மூலம் நாங்கள் மாணவர்கள

ஓவியங்கள் மூலம் ஏழைகளுக்கு உணவு! - ஐஸ்வர்யா மணிவண்ணன்

படம்
aiswarya ஐஸ்வர்யா மணிவண்ணன் ஓவியங்கள் மூலம் கொரோனா பாதிப்புக்கு உதவி ! கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவெங்கும் தீவிரமாக பரவியுள்ளது . மக்களை பாதித்து , தொழில்துறையை முடங்க வைத்துள்ளது . இதனால் பலரும் பெரு நகரங்களை கைவிட்டு தங்களது சொந்த ஊருக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர் . வேலையில்லாத நாட்களில் உணவுக்கு இவர்கள் என்ன செய்வார்கள் ? சில மனிதர்கள் உணவை விலையின்றி வழங்கி இவர்களின் பசிப்பிணி தீர்த்து வருகின்றனர் . இன்றும் இந்திய ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகருகையில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தடுமாறி வருகின்றனர் . இவர்களுக்கு எளிதாக உதவி செய்யும் வழியை ஐஸ்வர்யா கண்டுபிடித்துள்ளார் . இவர்களின் பசிப்பிணியை நீக்க இவரின் வலைத்தளத்தில் உள்ள ஓவியங்களை வாங்கினால் போதும் . இவரின் மைசா ஸ்டூடியோவில் (Maisha studio) வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன . அவற்றை வாங்குவதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 260 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது . “ நாங்கள் ஜூன் 19 க்கு முன்னரே 2.6 லட்ச ரூபாய் நிதி தி

கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை மாற்றிய ஸ்மார்ட்போனும், இணைய வசதியும்! - வெற்றிக்கதை

படம்
digital sathi indian express கிராமத்தில் நுழையும் தொழில்நுட்பம் ஓடிஷா மாநிலத்தைச் சேர்ந்த கிராமப்புற பெண்கள் இணையம் மூலம் கல்வி கற்று பல்வேறு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் . ஒடிஷாவின் கியோன்ஜார் என்ற மாவட்டத்திலுள்ள கிராமங்களில் 2 ஜி போன்கள்தான் பயன்பாட்டில் இருந்தன . ஆனால் அவற்றையும் ஆண்கள் பயன்படுத்தலாம் . பெண்கள் பயன்படுத்தக்கூடாது என்ற தடையே போடப்பட்டிருந்தது . யாராவது இந்த போன்களைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கிராமசபை நடவடிக்கை எடுக்கும்படி நிலைமை இருந்தது . 2019 அக்கிராம பெண்களுக்கு மிகவும் மோசமாக அமையவில்லை . 4 ஜி வசதி கொண்ட இணையத்தை அங்குள்ள பெண்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர் . இதற்கு இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாட்டு மையம் , கிராம தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு ஆகிய தன்னார்வ அமைப்புகள் , கூகுளோடு இணைந்து மாற்றங்களை நிஜமாக்கியுள்ளன . இன்று இக்கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் 14 முதல் 60 வயது வரை அனைவருமே இணையத்தில் வீடியோக்களைப் பார்க்கின்றனர் . பதிவேற்றுகின்றனர் . செய்திகளை பல்வேறு செயலிகள் வழியாக பகிர்ந்துகொள்கின்றனர் . மேற்சொன்ன தன்னார்வ அமைப்புகள் இங்குள

அசாமின் சாலைகளை செப்பனிடும் தன்னார்வலர்! - கௌதம்

படம்
1 2 மாவட்ட கமிஷனர் சாலையை பார்வையிடும் காட்சி சுகாதார விழிப்புணர்வு ஓவியங்கள்  அசாமின் சாலை மனிதர் கௌதம் பர்டோலய் அசாமில் பிரம்மபுத்ரா ஆற்றில் கரையோரத்தில் அமைந்துள்ள திப்ருகார், ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஊர். இவற்றை ஊர் நிர்வாகம் சரிசெய்தாலும் அவற்றை முழுமையாக சரி செய்யமுடியவில்லை. கௌதம் இப்பொறுப்பை தன் முதுகில் ஏற்று சுமக்கிறார். ஆம். ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக இங்குள்ள சாலைகளை, கழிவுநீர் பாதைகளை சரியாக அமைத்து சீர்செய்துவருகிறார். இதனை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோதும் இடைவிடாது தொடர்ச்சியாக   செய்துவருகிறார் என்பதை நீங்கள் அறிவது முக்கியம். இவர் தனது பணிகளை ஹெரம்பா பர்டோலய் என்ற சாலையை செப்பனிடுவதிலிருந்து தொடங்கினார். இவரது தந்தையின் பெயர்தான் அந்த சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது தந்தை ஆசிரியர், சமூக சேவகர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர். சாலைகள் மட்டுமன்றி, தொன்மையான கலாசார கட்டடங்களையும் பாதுகாக்க நிதியுதவி அளித்து வருகிறார். ”ஹெரம்பா பர்டோலஸ் சாலை நீங்கள் இப்போது பார்ப்பதை விட இரண்டு அடி தூரம் குறைவாகவே இருந்தது. சாலைகள் உடைந்துபோய் கழிவுநீர் பாதைகள் அடைபட்ட

குற்றங்களைத் தீர்க்க இளைஞர்களால் முடியும் - நம்பிக்கை அதிகாரி

படம்
உங்களுடைய நாட்டு பிரச்னைகளை நீங்களே தீர்க்க முன்வராவிட்டால் எப்படி? சரி, யார்தான் அதனை தீர்ப்பது? என யதார்த்தமான கேள்விகளை முன்வைக்கிறார் வழக்குரைஞராக இருந்து ஐபிஎஸ் ஆபீசராக சாதித்த ஹர்ஸ் போடர். வழக்குரைஞராக இருந்து பிரச்னைகளை பார்த்தவர் தற்போது அதனை தீர்க்கும் வழிதேடி மாற்றங்களை விதைத்து வருகிறார். கடந்த ஆண்டின் டெட்எக்ஸ் கேட்வேயில் தனது சிந்தனைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். வெறும் சிந்தனை மட்டுமல்ல செயலிலும் புலிதான். மகாராஷ்டிராவில் குற்றங்களை களைய மகாராஷ்டிரா இளைஞர்கள் நாடாளுமன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி 42 ஆயிரம் இளைஞர்களை ஈர்த்துள்ளது சாதனை அல்லவா? மேலும் பார்வையற்றோருக்கான ஆதரவு சட்டங்களையும் இயற்ற முயற்சித்து வருகிறார். “நான் அடிப்படையில் வழக்குரைஞர் என்பதோடு ஆக்ஸ்போர்ட்டில் பெற்ற கல்வி அறிவும் பிரச்னைகளை எளிதாக புரிந்துகொள்ள உதவியது. அரசின் உதவியுடன் மக்களுக்கு என்னவிதமான உதவிகளை செய்யமுடியும் என யோசித்து செயல்படுகிறேன்” என நம்பிக்கை பெருக பேசுகிறார் ஹர்ஸ் போடர். மாலேகானில் போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றவர் உடான் எனும் திட்டத்தை உருவாக்கி கலவரங்களில் ஈடுபட்ட இள

விடுதலையான பின்னர்....

படம்
ஐ’ம் ப்ரீ என்ற பெயரில் புதிய டேபிள் காலண்டர் ஒன்று சந்தைக்கு வந்துள்ளது. என்ன தீம்? கொத்தடிமையாக இருந்த மீட்கப்பட்டவர்களின் வாழ்க்கைதான் காலண்டர் படங்களாக பிரமிக்க வைக்கின்றன. இதனை இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற தன்னார்வ அமைப்பு தயாரித்திருக்கிறது. ”கடந்த எட்டு ஆண்டுகளாக வெவ்வேறு தீம்களில் ஆண்டு காலண்டர்களை உருவாக்கி  வருகிறோம். இந்த ஆண்டு கொத்தடிமையாக இருந்த மீட்கப்பட்டவர்களின் மீது ஏன் வெளிச்சம் பாய்ச்சக்கூடாது என்று நினைத்தோம்” என்கிறார் அமைப்பின் உறுப்பினரான சரோன் ஜபெஷ். ஜூன் மாதத்தில் சித்ரா என்ற சிறுமி முகம் கொள்ளாத சிரிப்புடன் மாதத்தை வரவேற்கிறார். திருவண்ணாமலை செய்யாறு அருகே கொத்தடிமையாக மூன்றாம் தலைமுறையாக உழைத்தவரை கடந்தாண்டு மே மாதத்தில்  அரசு மீட்டிருக்கிறது. “என் குழந்தைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க முடியாது. உடனே என்னை திட்டும் முதலாளி, வேலை முக்கியமா? சோறு முக்கியமா? என மிரட்டுவார்” என மிரட்சியை நினைவில் தேக்கி பேசுகிறார் சித்ரா. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்வை காலண்டர்களுக்காக படம் பிடித்திருக்கிறார் புகைப்படக்காரர் ஜோஸூவா ஜ

வன்முறை குழந்தைகளுக்கு உதவும் ஓவியர்!

படம்
குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டும் கலைஞர் 1996 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிடி ஜெயின், மதுரைக்கு வந்தார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அருகில் பதினான்கு வயதுப்பெண் உட்கார்ந்து பூ விற்றபடி இருந்தார். எதேச்சையாக பேச்சு கொடுத்தபோதுதான் அச்சிறுமி கல்வி அறிவு இல்லாதவர் என்பதும், பகுதிநேரமாக விபச்சாரம் செய்து வருவதும் தெரிந்து அதிர்ச்சி ஆனார் சிடி ஜெயின். அன்று உறுதியாக ஜெயின் எடுத்த முடிவினால்தான் அவரைப்பற்றி இப்போது நாம் கோமாளிமேடையில் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறோம். என்ன முடிவு எடுத்தார்? வறுமை, பாலியல் தொழிலாளியாக உள்ள பெண்களுக்கு உதவி விழிப்புணர்வு ஊட்டுவதென. இதன் விளைவாக தான் வரைந்த 550 ஓவியங்களை இதற்காக பயன்படுத்தினார். “ தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலுள்ள பாலியல் வன்முறைக்குள்ளான சிறுவர் சிறுமியர்களிடையே பேசி அவர்களது வாழ்க்கையை ஓவியங்களாக்கினேன். அதில் நூறு ஓவியங்களை தேர்ந்தெடுத்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் காட்சிப்படுத்த முயற்சித்து வருகிறேன்” என்கிறார் ஜெயின். மதுரையில் இதற்கான முன்னோட்டத்தை சென்டிமென்டாக தொடங்கியுள்ளார் கலைஞர் ஜெ

துப்பாக்கிச்சூடுகளை தடுக்கும் பாதுகாவலர்!

படம்
பள்ளிகளின் பாதுகாவலர்! பள்ளியின் நெருப்பு அலாரத்தை அடித்த சிறுவனை கண்டுபிடித்தபோது சிகாகோ பொதுப்பள்ளி பாதுகாப்பு அதிகாரி ஜேடின் சூ உறுதியாக சொன்னார். “இதற்காக நான் உன்னை தண்டிக்க போவதில்லை. நான் உனக்கு வேலைதருகிறேன். செய்கிறாயா?” என்று கேட்டார். கருப்பின மாணவர் ஒப்புக்கொள்ள, அதன்பின் நெருப்பு அலாரமணி ஒலிக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு நவ.11 முதல் 3 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களது பாதுகாப்புக்கு ஜேடின் சூ பொறுப்பு.  பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், பள்ளியிலும், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் வரையிலும் கண்காணித்து அனுப்புகிறது ஜேடின் சூ குழு. 2009 ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி இன்று விரிவான திட்டமாக பின்பற்றப்பட்டுவருகிறது. “பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்தின்போது, காலை பதினொரு மணிக்கு பள்ளிக்கு வெளியே மாணவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என யோசித்தேன்” என்கிறார் பள்ளி ஆய்வாளரான நிகோலஸ் ஜே ஸ்க்யூலெர். சிகாகோ பல்கலைக்கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் வென்றவர் மோட்டரோலா, கிராஃப்ட் புட்ஸ் நிறுவனங்களில் பணிபுரிந்தவர் ஜேடின் சூ. 

இளைஞர்களை ஊக்குவிக்கும் இசைக்குழு!

படம்
BTS –- இளைஞர்களின் எழுச்சி! ஏழு கொரிய இளைஞர்கள். வயது இருபதுதான். ஒரு பாடல் கூட ஆங்கிலம் கிடையாது. ஆனால் கிராமி விருது பரிந்துரைப்பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்கள். எப்படி ஜெயித்தார்கள்? கொரியன், ஜப்பான், ஆங்கிலம், ஸ்பானிஷ் என அத்தனை மொழிகளையும் உடைத்து போட்டு கிளறிய போட்டு உருவாக்கிய அத்தனை பாட்டுகளும் ஹிட். அதோடு ஆண், பெண் எல்லைகளை மங்கலாக்கி ஸ்கர்ட் அல்லது பேண்ட் என சந்தேகம் வரும் உடை அணியும் கலாசாரத்தை பிடிஎஸ் குழு உருவாக்கி அனைவரையும் ஈர்த்தது.  மொழிகளே இப்படி என்றால் பாடல்வகை எப்படியிருக்கும்? ஜாஸ், பாப், ராப், இடிஎம் என அத்தனை இசை வெரைட்டிகளும் இவர்களில் ஆல்பங்களில் உண்டு. கண்மை தீட்டுவது, பெண்மை ததும்பும் உடைகள் என பிடிஎஸ் குழுவினர் மீது 2003 ஆம் ஆண்டு கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். அன்பு, காதல், கருணை என பாடல்களை பாடிய குழு, பாடல்களிலும் அவன், அவள், அவர்கள் என வார்த்தைகளை பயன்படுத்தியது யாரும் செய்யாத புதுமை. ஏழுபேரின் இதயமும் ஒன்றாக துடிப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான். 

குழந்தைகளுக்கு கதை சொல்லும் ஊடகவியலாளர்!

படம்
ஆப்பிரிக்காவின் ஊடக ஒளி! இரவுணவுக்கு தோழியின் வீட்டுக்கு சென்றபோது, ஏனோ தட்டிலிருந்த உணவை பயோலா ஆலபியால் சரியாக சாப்பிடமுடியவில்லை. “ஆப்பிரிக்காவில் பசி,பட்டினி பிரச்னைகள் தீர்ந்துவிட்டதா என்ன?” என்ற தோழியின் அம்மா கேட்டகேள்வி ஆலபியின் நெஞ்சை விட்டு நீங்கவேயில்லை.  இன்று ஆப்பிரிக்காவின் உள்ளூர்மொழிகளில் இயங்கும் ஏழு டிவி சேனல்களை வேட்கை குறையாமல் உருவாக்கியிருக்கிறார் ஆலபி. சின்சினாட்டி, லாகோஸ், நைஜீரியாவில் பெற்றோருடன் வசித்தவர், தென்கொரியாவின் சியோலில் கல்வி உதவித்தொகை பெற்று படித்தார். டாக்டர் கனவுடன் இருந்த ஆலபி, ஊடகத்தின் பக்கம் மக்களுக்காக திரும்பினார். எம்நெட் ஆப்பிரிக்கா எனும் ஊடக நிறுவனத்தை தொடங்கி, உள்ளூர் மொழிகளில் நிகழ்ச்சிகளை உருவாக்கி டிவிகளுக்கு வழங்கத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில் கன்சல்டன்சி தொடங்கி கலைஞர்களுக்கு நிதியுதவியும் அளித்தார். நைஜீரியாவின் நோலிவுட்டிலும் பெண்களின் பிரச்னைகள் பற்றி பேசவைத்தது ஆலபியின் தன்னிகரற்ற சாதனை. 2012 ஆம் ஆண்டு சக்திவாய்ந்த ஆப்பிரிக்க பெண்கள் பட்டியலில் இடம்பெற்றாலும் குழந்தைகளுக்கான கல்வி நிகழ்ச்சிகளை தயாரிப்பதே ஆலபிக்க

குழந்தைகளை வலிமையாக்கும் மிராக்கிள் பவுண்டேஷன்!

படம்
குழந்தைகளுக்கு வானம் தேவை! - ச.அன்பரசு குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றும் அமைப்பு! அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பௌட்ரியாக்ஸ் டிவி ஸ்டேஷனில் வேலை செய்துவந்தார். இந்தியாவுக்கு ஜாலி சுற்றுலாவாக தோழி கிறிஸ் மான்ஹெய்ம் உடன் கிளம்பினார். அப்போது கூட அவரது வாழ்க்கை மாறப்போவதை கரோலின் நினைத்து பார்த்திருக்கவில்லை. கரோலினின் தோழி மானுஸ் என்ற சிறுவனுக்கு நிதியுதவி செய்து வந்தார். அவனை சந்திக்கத்தான் அந்த கோடைக்கால ட்ரிப். கிறிஸ் தனது சேமிப்பு பணத்தை வெட்டியாக செலவழிக்கிறார் என்று கரோலின் அவரிடமே கூறினார்தான். ஆனால் கிறிஸ்ஸை வரவேற்ற கிராமத்தையும் ஆதரவற்றோர் இல்லத்தையும் பார்வையிட்டு பேரதிர்ச்சி அடைந்தார் கரோலின் “எனது நாயைக்கூட அங்கு வசிக்கவிடமாட்டேன். அப்படியொரு மோசமான சூழலில் ஆதரவற்றோர் காப்பகம் நடந்துவந்தது. குழந்தைகளின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு உட்குழிந்த வெறுமையான கண்களால் எங்களைப் பார்த்தனர். அந்த நினைவு என்னை தீவிரமாக தாக்க சில மாதங்களிலேயே எனது வேலையை விட்டு விலகி மிராக்கிள் பவுண்டேஷனை தொடங்கினேன்” என்கிறார் கரோலின். 2000 ஆம் ஆண்டில் தொடங்க

சூப்பர்ஸ்டார் சமையல் கலைஞர் கரிமா அரோரா!

படம்
கிச்சன் ஸ்டார் கரிமா! ஹாங்காங்கில் வசிக்கும் கரிமா அரோரா தன்னுடைய Gaa உணவகத்திற்கு உணவுத்துறையின் உயர்ந்த அங்கீகாரமான மிச்செலின் ஸ்டார் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரோமா தொடங்கிய உணவகமான Gaa, தாய்லாந்திலுள்ள மிச்செலின் கைடு நிறுவனத்தின் ஸ்டார் அங்கீகாரத்தை வென்றுள்ளது. இந்தியா –- தாய்லாந்து வெரைட்டி உணவுகளை சீசன் காய்கறிகளை சமைத்து தந்து மக்களின் அன்பை வென்றுள்ளார் கரிமா அரோரா. மும்பையில் பத்திரிகையாளராக பணியாற்றியவர் கரிமா என்றால் நம்புவீர்களா? “ஆறுமாதம் பத்திரிகையாளராக வேலைபார்த்தேன். திடீரென ரெஸ்டாரண்ட் தொடங்கினால் என்ன என்று தோன்ற, பயிற்சிகளை பெற்று துணிந்து இறங்கிவிட்டேன்” என புன்னகைக்கிறார் கரிமா அரோரா. கார்டன் ராம்சே(2011), ரெனெ ரெட்ஸெபி(2013-15) ஆகியோரிடம் பணியாற்றி அரிச்சுவடிகளை கற்றவர், பாங்காக்குக்கு இடம்பெயர்ந்து ககன் ஆனந்துக்கு உதவியாளராகி வெரைட்டி உணவுகளை தயாரிக்க கற்றது முக்கியமான திருப்பம். கடையில் உணவுகளோடு எளிமையான உள் அலங்காரம்(Boose Studio-Jittapoo opas) வசீகரிக்கிறது.

பாலஸ்தீனத்தின் நம்பிக்கை இரட்டையர்கள்!

படம்
நம்பிக்கை தரும் இரட்டையர்! பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் 70% வேலையில்லா பட்டதாரிகளில்(1.9 மில்லியன் பேர்) ஒருவர் பாஸ்மா அலி. உணவுப்பொருள் கிடைக்காமல் தடுமாறி வரும் மக்களில் 49% பேர் சரியான வருமானம் இன்றி தடுமாறிவருகின்றனர். 2012 பாஸ்மா அலி, ராஸா என இரு பெண்களும் இணைந்து தொடங்கிய சிகேட்வே ஸ்டார்ட்அப், இன்று பல நூறு காஸாவாசிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. உலகவங்கியிடம் 3 மில்லியன் நிதியை பெற்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சியளித்துவருகிறார்கள். “இளைஞர்களின் கனவுகள் நிறைவேறாமல் போவது அவர்களை தீவிரவாதத்திற்கு அழைத்துச்செல்லும் அபாயத்தை உருவாக்கும்” என்கிறார் பாஸ்மா அலி. தற்போது பாஸ்மா அலி மற்றும் ராஸா உள்ளிட்ட தோழிகளின் சமூக அக்கறையால் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.  

சத்ய சாய் விருதுகள் -2018

படம்
சாதனை விருதுகள்! ஸ்ரீசத்ய சாய் லோக சேவா ட்ரஸ்ட் சார்பாக சமூகத்திற்கு அர்ப்பணிப்பாக உழைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கல்வி, சுகாதாரத்திற்காக உழைத்தவர்களைப் பற்றிய அறிமுகம்… சகேனா யகூபி ஆப்கானிஸ்தானின் ஹீரத் நகரைச் சேர்ந்த கல்வியாளர். AIL என்ற நிறுவனத்தை தொடங்கிய குழந்தைகளுக்கான கல்வி, அகதி மக்களுக்கான உரிமைகளுக்கான குரல்கொடுக்கும் ஆளுமை. அமெரிக்காவின் பசிஃபிக் பல்கலைக்கழகம், லோமா லிண்டா பல்கலைக்கழகத்தில் படித்தவர் ஹோப் இன்டர்நேஷனல் எனும் என்ஜிஓவை தொடங்கி உதவிகளை வழங்கி வருகிறார். லார்னா ருட்டோ கென்யாவைச் சேர்ந்த ருட்டோ, அவர் நாட்டில் அதிகரித்த பிளாஸ்டிக் கழிவு பிரச்னையை தொழில்நிறுவனம் தொடங்கி தீர்க்க முயற்சித்து வருகிறார். மரங்களை வெட்டுவதை தவிர்க்க பிரசாரம் மேற்கொண்டு 250 ஏக்கர்களுக்கு மேற்பட்ட வனத்தை காப்பாற்றியுள்ளார். லெய்மா போவீ லைபீரியாவைச் சேர்ந்த லெய்மா, உள்நாட்டுப்போரை தடுப்பதில் பெண்களை ஒருங்கிணைத்து அகிம்சை வழியில் போராடி முக்கிய பங்காற்றியவர். போவீ பவுண்டேஷன் மூலம் கிறிஸ்தவ,முஸ்லீம் பெண்களை ஒருங்கிணைத

பிரேசிலை கலக்கும் திருநங்கை ஆசிரியர்!

படம்
திருநங்கை ஆசிரியர்! பிரேசிலின் கான்ஹோனாஸ் நகரில் லியோனா தனித்த பெண்மணி. வேலை செய்யும் பள்ளியில் பிற ஆசிரியர்கள் அவரை மிஸ் ஆல்பர்ட் என சங்கடமுடன் அழைத்தாலும் லியோனாவுக்கு தான் திருநங்கை என்பது எப்போதுமே மறக்காது. அனைத்து சர்ச்சுகளுடன் பள்ளிகள் இணைந்துள்ளதால் லியோனாவுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருந்தது. 50 ஆயிரம் பேர் வசிக்கும் நகரில் லியோனா மட்டுமே திருநங்கை. “திருநங்கை ஆசிரியர் தங்கள் குழந்தைகளை தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களாக மாற்றிவிடுவார்கள் என பெற்றோர் கவலைப்படுகின்றனர்” என்கிறார் ட்ரான்ஸ்பசண்டோ திட்ட பேராசிரியரான அன்னா பௌலா பிராகா லஸ். பிரேசிலைச் சேர்ந்த IBTE அமைப்பு, கல்வித்துறையில் பணியாற்றும் திருநங்கைகளை ஒருங்கிணைக்கிறது. “இதுவரை நாடு முழுவதும் 90 திருநங்கை ஆசிரியர்களை அடையாளம் கண்டுள்ளோம். தங்கள் அடையாளங்கள் ஒளித்து வாழ அவசியமில்லை என பிரசாரம் செய்துவருகிறோம்” என்கிறார் ஐபிடிஇ அமைப்பின் துணைத்தலைவரான சயனோரா. தற்போது கொலம்பியா, அர்ஜென்டினா நாடுகளில் திருநங்கைகள் பள்ளிகளில் ஆசிரியர்களாக தன்னம்பிக்கையுடன் வலம்வரத் தொடங்கியுள்ளனர்.

ஐரோப்பாவின் வல்லரசு கமிஷனர்!

படம்
ஐரோப்பாவின் போலீஸ்! மார்க்கரே விஸ்டேகர்.. கடந்த நான்கு ஆண்டுகளாக ஐரோப்பிய யூனியனின் 28 நாடுகளில் நடக்கும் பிஸினஸ் விதிமீறல்களை சட்டப்படி தண்டித்த பொறுப்புமிக்க அதிகாரி. ஆப்பிள், ஃபேஸ்புக், கூகுள் என பில்லியன் டாலர் கம்பெனிகளின் விதிமீறல்களை சமரசமின்றி தண்டித்து புகழ்பெற்ற பெண்மணி விஸ்டேகர். டென்மார்க்கில் பிறந்த விஸ்டேகர், டேனிஷ் சோஷியல் லிபரல் கட்சி உறுப்பினர். ஆப்பிள் போனை பயன்படுத்துபவருக்கு ஃபேஸ்புக்கில் கூட கணக்கு கிடையாது. அரசியல்வாதியாக புகழ்பெறுவதற்கு முன் போர்ஜென் எனும் டிவி தொடரில் நடித்தவர். “ஜனநாயக நாட்டில் விதிகள் அனைவருக்கும் பொதுவானவைதான். டெக் நிறுவனங்கள் வரியை கட்டாமல் மீறுவதை எப்படி அனுமதிப்பது?” எனும் விஸ்டேகர், கூகுளுக்கு 2.7 பில்லியன்(2017), ஸ்டார்பக்ஸ்(33.5 மில்லியன்(2015)), ஆப்பிள்(14.8 பில்லியன்(2016), ஃபேஸ்புக்(125 மில்லியன்(2017)) வரி விதித்து அலறவைத்தவரின் பதவி அடுத்த ஆண்டோடு நிறைவுக்கு வருகிறது. கட்சி ஆட்சியில் இல்லாத நிலையில், ஐரோப்பிய யூனியனில் அவர் மக்களுக்காக, சட்டத்தை காக்க செய்த போராட்டங்களை வரலாறு நினைவுகூரும்.

கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் போராளி!

படம்
கருக்கலைப்பு நம் உரிமை! அர்ஜென்டினாவைச் சேர்ந்த சப்ரினா கர்டாபியா, கருக்கலைப்பை சட்டரீதியான உரிமையாக்க முயற்சித்து வருகிறார். ஆக.8 அன்று போராட்டத்தின் வழியாக கொண்டு வந்து கருக்கலைப்பு மசோதா தோற்றுப்போனாலும் வழக்குரைஞரான சப்ரினா தன் செயல்பாடுகளில் மனம்தளரவில்லை. போப் பிரான்சிஸ் பிறந்த நாடான அர்ஜென்டினா, கத்தோலிக்கர்களின் பெரும்பான்மையை கொண்டது. லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில் க்யூபா, கயானா, புவர்டோ ரிகோ, உருகுவே ஆகிய நாடுகளில் மட்டுமே கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அரசு அனுமதி உண்டு. அர்ஜென்டினாவில் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், வல்லுறவுக்கு உள்ளானால் மட்டுமே கருக்கலைப்பு செய்யமுடியும். 2009 ஆம் ஆண்டிலிருந்து பாலியல் கல்வி, வன்முறை, கருக்கலைப்பு சட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக இளைஞர்களை திரட்டி   வழக்குரைஞரான சப்ரினா போராடி வருகிறார். “1940 ஆம் ஆண்டு ரகசிய கருக்கலைப்பால் எனது பாட்டி இறந்துபோனார். கருக்கலைப்பு என்பதைக்கூட பெறமுடியாத இரண்டாம் தர குடிமகன்களாக இருக்கிறோம் என்பதே வருத்தம்” என்பவர் Red de mujeres(RDM) அமைப்பை பெண்களின் உரிமைகளை பெற துயர்

வேலைக்கு நான் கேரண்டி!

படம்
வேலைக்கு கேரண்டி! கல்லூரியில் இடைநின்றவர், பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அமெரிக்காவைச் சேர்ந்த காரட் லார்ட் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தந்து வருகிறார். அமெரிக்காவில் ஹேண்ட்ஷேக் என்ற நிறுவனத்தை தொடங்கி 300 பல்கலைக்கழகங்கள், 700 நிறுவனங்களுடன் நல்லுறவு பேணி வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து வருகிறார். பட்டதாரிகளில் 43% பேர் வேலைவாய்ப்பின்றி தடுமாறி வருவது அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தையின் கதை. மிச்சிகனின் பிர்மிங்காமில் பிறந்த லார்ட் படிப்பில் சுட்டி. அதோடு கிடைத்த நேரங்களில் கணினிகளை பழுதுபார்த்து பாக்கெட் மணி சம்பாதித்து வந்தார். “கூகுள், ஃபேஸ்புக் போன்ற சிறிய டெக் நிறுவனங்களில் வேலைபார்ப்பது அன்று பேஷன்” எனும் லார்ட் அப்படி வேலைபார்த்தபோதுதான் ஹேண்ட்ஷேக் நிறுவன ஐடியா உருவாகியிருக்கிறது. பதினான்கு மில்லியன் மாணவர்களை பல்வேறு நிறுவனங்களுடன் இணைத்து அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது ஹேண்ட்ஷேக். தங்களுடைய சிறப்பான ஐடியாக்களுக்கு முதலீட்டு நிறுவனங்களின் தொகையையும் அங

ஆமைகளை காப்பாற்றும் கடல்கன்னி!

படம்
கடல் உயிரிகளுக்கும் நேசம் தேவை! உயிரியல் பட்டதாரியான கிறிஸ்டைன் ஃபிக்கனர், 2015 ஆம் ஆண்டு கோஸ்டா ரிகா கடல் பகுதியில் ஆமை ஒன்றை பார்த்தார். மூக்கில் குளிர்பான ஸ்ட்ரா குத்தி உயிருக்கு போராடியதைப் பார்த்து அதனைக் காப்பாற்றினார். அம்முயற்சியை பதிவு செய்த 8 நிமிட வீடியோ, சூழலியல் உலகையே புரட்டிப்போட்டது. தினசரி அமெரிக்கர்கள் மட்டும் 390 மில்லியன் ஸ்ட்ராக்களை பயன்படுத்துகின்றனர். 8 மில்லியன் மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் பிறந்து டெக்சாஸில் ஆய்வுப்பட்டம் பெற்ற கிறிஸ்டைன் பள்ளி, கல்லூரிகளில் சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். “ஒரு சிறிய பிளாஸ்டிக் ஸ்ட்ரா, என்ன செய்யும் என்பதை அந்த வீடியோ மக்களுக்கு உணர்த்திய வேகம் அபாரமானது” என்கிறார் கிறிஸ்டைன். “அமெரிக்கர்கள் பலருக்கும் அறிவியலாளர் என்றால் வெள்ளையர்களே நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் நிறம், வர்க்கம் எதுவாக இருந்தாலும் அறிவியல் ஆய்வுகளில் இறங்கவேண்டும் ஊக்கம் கொடுத்து உதவுவதே எனது லட்சியம்” என புன்னகைக்கிறார் கிறிஸ்டைன் ஃபிக்கனர்.  

கல்யாணம் செய்ய 3 லட்சம் போதும்! - இளைஞரின் சூப்பர் பிளான்

படம்
கல்யாணத்தில் செலவுகளை கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமே கிடையாது. புடைவைகள், நகைகள், போக்குவரத்து, கல்யாண சாப்பாடு என செலவுகள் எங்கு பார்த்தாலும் காட்டாறாக உடைத்து ஓடும்.  ஆனால் ஹரிகிருஷ்ணன் கல்யாணத்தை மூன்று லட்சத்தில் முடித்து தருகிறோம் என ஆச்சரியப்படுத்துகிறார். 3 லட்சத்து 33 ஆயிரத்து 333 என ராசி எண்கள் போல தன் திட்டத்தை விளம்பரப்படுத்தியுள்ளார் ஹரி. இதே காசில் ஆறு கல்யாணங்களையும் முடித்து வைத்து சாதித்துவிட்டார் ஹரி. அடுத்த நான்கு லட்சரூபாய்க்கான பேக்கேஜையும் தன் குழுவினருடன் விவாதித்து வருகிறார். மூன்று லட்ச ரூபாயில் என்ன விஷயங்கள் வரும்? மாப்பிள்ளை, மணமகள் மேக்கப், மணமேடை அலங்காரம், திருமணம், ரிசப்ஷன், வீடியோ, போட்டோ, ஐநூறு பேருக்கு சாப்பாடு(இரவு), நூற்று ஐம்பது பேருக்கு காலை உணவு, புரோகிதர் ஏற்பாடு, மங்கள வாத்தியம் என அத்தனையையும் அடித்து பிடித்து பேக்கேஜ் ஆக்கியுள்ளார் இந்த இளைஞர். "2017 ஆம் ஆண்டு ஹாசு என்ற ஆலோசனை நிறுவனத்தை தொடங்கினேன். இது முதலில் போட்டோகிராபர்கள் மற்றும் அலங்காரம் செய்பவர்களை ஏற்பாடு செய்து தரும் நிறுவனம்தான். குறைந்த விலையில் இதனை செய