வேலைக்கு நான் கேரண்டி!






Related image




வேலைக்கு கேரண்டி!

கல்லூரியில் இடைநின்றவர், பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அமெரிக்காவைச் சேர்ந்த காரட் லார்ட் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தந்து வருகிறார்.

அமெரிக்காவில் ஹேண்ட்ஷேக் என்ற நிறுவனத்தை தொடங்கி 300 பல்கலைக்கழகங்கள், 700 நிறுவனங்களுடன் நல்லுறவு பேணி வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து வருகிறார். பட்டதாரிகளில் 43% பேர் வேலைவாய்ப்பின்றி தடுமாறி வருவது அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தையின் கதை. மிச்சிகனின் பிர்மிங்காமில் பிறந்த லார்ட் படிப்பில் சுட்டி. அதோடு கிடைத்த நேரங்களில் கணினிகளை பழுதுபார்த்து பாக்கெட் மணி சம்பாதித்து வந்தார். “கூகுள், ஃபேஸ்புக் போன்ற சிறிய டெக் நிறுவனங்களில் வேலைபார்ப்பது அன்று பேஷன்” எனும் லார்ட் அப்படி வேலைபார்த்தபோதுதான் ஹேண்ட்ஷேக் நிறுவன ஐடியா உருவாகியிருக்கிறது.

பதினான்கு மில்லியன் மாணவர்களை பல்வேறு நிறுவனங்களுடன் இணைத்து அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது ஹேண்ட்ஷேக். தங்களுடைய சிறப்பான ஐடியாக்களுக்கு முதலீட்டு நிறுவனங்களின் தொகையையும் அங்கீகாரமாக பெற்றுள்ளது ஹேண்ட்ஷேக்கின் குழு.

  



பிரபலமான இடுகைகள்