உடலில் அரிப்பு ஏற்படுவதன் காரணம் என்ன?

அரிப்பின் காரணம் தெரியுமா?
கொசு கடித்தாலும் சரி, கீழே விழுந்து காயம் ஆனாலும் சரி உடலில் அரிப்பு ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் ஒட்டுண்ணி தாக்குதலை உடல் தடுக்க அரிப்பை கருவியாக்குகிறது.
“மூளை செல்களில் சுரக்கும் செரடோனின் வலி உணர்வை மூளைக்கு கடத்துகிறது. அதேசமயம் உடலில் பூச்சிகளால் அல்லது வேறு விதமாக பாதிப்பு ஏற்படும்போது அது குறித்த கவனத்தை தர அங்கு அரிப்பை தூண்டுகிறது” என்கிறார் வாஷிங்டன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி மைய இயக்குநரான பேராசிரியர் ஸூ ஃபெங் சென்.
உடலிலுள்ள நோய்தடுப்பு செல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது அதனை மனிதர்களுக்கு உணர்த்த அரிப்பு ஏற்படும் சிக்னலை நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்துகிறது. அதேசமயம் ஒருமுறை அரிப்பு ஏற்பட்டால் அது தொடர்வது என்ன காரணத்திற்காக குழப்பம் ஏற்படுகிறது. “அரிப்பு ஏற்படுவது என்பது தீவிரமாகாமல் அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவுகிறது” என்கிறார் பேராசிரியர் சென். கல்லீரல் நோய், அலர்ஜி, எக்சிமா பிரச்னைகளால் ஏற்படும் அரிப்பு என்பது தோலில் காயம் ஏற்படுமளவு நீளும். இதற்கான தீர்வு மருத்துவரை ஆலோசித்து உணவுமுறை, வாழும் சூழலை மாற்றுவது மட்டுமே.