வைரஸ் ஆய்வாளர் ஆரோன் கிளக்!







ஆரோன் கிளக்(1926-2018)


லிதுவேனியாவின் ஸெல்வா நகரில்  யூதக்குடும்பத்தில் பிறந்த சர் ஆரோன் கிளக், தென் ஆப்பிரிக்காவில் படித்த உயிரிவேதியியலாளர். இவரின் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் கண்டுபிடிப்புக்காக 1982 ஆம் ஆண்டு நோபல் விருது வென்றார்.

இரண்டு வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற கிளக் கேப்டவுன் பல்கலைக்கழகம், விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அறிவியல் பட்டங்களைப் பெற்றார். பின்னர் 1851 ஆம் ஆண்டு ராயல் கமிஷனில் உதவித்தொகை கிடைக்க இங்கிலாந்து சென்று முதுகலை படித்துவிட்டு ஜான் பெர்னலின் ஆய்வகத்தில் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் என்ற வேதியியலாளரிடம் வேலைக்கு சேர்ந்தார். வைரஸ்களின் மேல் ஆர்வம் பிறந்தது இங்குதான். 

1962 ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜில் அமைக்கப்பட்ட மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சி கழகங்களில் (MRC,LMB) இணைந்து பின்னாளில் அதன் தலைவராக உயர்ந்தார். இங்குதான் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை கண்டுபிடித்து சாதித்தார் கிளக்.

92 வயதில் மரணமடைந்த கிளக், தலைப்புச்செய்தியில் இடம்பிடித்த விஞ்ஞானி அல்ல. கிளக்கின் கண்டுபிடிப்புகளிலிருந்துதான் எக்ஸ்‌ரே, சி.டி.ஸ்கேன் ஆகியவை மேம்படுத்தப்பட்டன. 1995 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி தலைவரானவரை பெருமைப்படுத்த பென்குரியன் பல்கலைக்கழகம்(இஸ்‌ரேல்) ஆராய்ச்சி மையத்திற்கு கிளக் பெயரை சூட்டியுள்ளது.


பிரபலமான இடுகைகள்