இளைஞர்களை ஊக்குவிக்கும் இசைக்குழு!


Image result for bts

BTS –- இளைஞர்களின் எழுச்சி!

ஏழு கொரிய இளைஞர்கள். வயது இருபதுதான். ஒரு பாடல் கூட ஆங்கிலம் கிடையாது. ஆனால் கிராமி விருது பரிந்துரைப்பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்கள். எப்படி ஜெயித்தார்கள்?

கொரியன், ஜப்பான், ஆங்கிலம், ஸ்பானிஷ் என அத்தனை மொழிகளையும் உடைத்து போட்டு கிளறிய போட்டு உருவாக்கிய அத்தனை பாட்டுகளும் ஹிட். அதோடு ஆண், பெண் எல்லைகளை மங்கலாக்கி ஸ்கர்ட் அல்லது பேண்ட் என சந்தேகம் வரும் உடை அணியும் கலாசாரத்தை பிடிஎஸ் குழு உருவாக்கி அனைவரையும் ஈர்த்தது. 

மொழிகளே இப்படி என்றால் பாடல்வகை எப்படியிருக்கும்? ஜாஸ், பாப், ராப், இடிஎம் என அத்தனை இசை வெரைட்டிகளும் இவர்களில் ஆல்பங்களில் உண்டு. கண்மை தீட்டுவது, பெண்மை ததும்பும் உடைகள் என பிடிஎஸ் குழுவினர் மீது 2003 ஆம் ஆண்டு கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். அன்பு, காதல், கருணை என பாடல்களை பாடிய குழு, பாடல்களிலும் அவன், அவள், அவர்கள் என வார்த்தைகளை பயன்படுத்தியது யாரும் செய்யாத புதுமை. ஏழுபேரின் இதயமும் ஒன்றாக துடிப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.