கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் சாதிப்பாரா?



இளம்வயதில் பெரும் பொறுப்பு!

இந்திய அரசால் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன். 47 வயதில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு மாத சம்பளம் 80 ஆயிரம் ரூபாய். 

படிப்பில் கெட்டிக்காரர்!

ஏறத்தாழ மோசமான கடன் கொள்கைகளால் பாதாளத்திலுள்ள இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் திறன் இவருக்கு உண்டா என்பது விரைவில் தெரிந்துவிடும். ஸ்கூல் ஆப் பிஸினஸ் கல்லூரி பேராசிரியரான கிருஷ்ணமூர்த்தி, பந்தன் வங்கி குழுவில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்த பொருளாதார வல்லுநர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. 

ஐஐடி ஜேஇஇ தேர்வில் இந்தியளவில் 159  வது ரேங்கில் வென்று ஐஐடி கான்பூரில் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங்கில் பிடெக் பட்டம் வென்றவர், பின்னர்  97-99  ஆம் ஆண்டில் எம்பிஏ பொருளாதாரம் படிப்பை கொல்கத்தா ஐஐஎம்மில் நிறைவு செய்தார். படிப்பு என்றால் கிருஷ்ணமூர்த்தி யாரையும் தன்னை முந்தவிட்டதில்லை. அனைத்திலும் டாப். 

தன் முனைவர் படிப்பை பொருளாதார வல்லுநர் லுகி ஸிங்கலெஸ், ரகுராம் ராஜன்(முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி தலைவர்) ஆகியோரின் வழிகாட்டுதலில் நிறைவு செய்தார். 

நாட்டுக்கு நல்லரசு பாஜக!

"பாஜக ஆட்சியில் இருந்த காலங்களில்(1999-2003) உத்தரப்பிரதேசத்தில் குற்றச்செயல்பாடுகள் குறைந்தன. மேலும் அரசியல்வாதிகள் பலரும் எடுக்கத்தயங்கிய தைரியமான முடிவுகளை பாஜக அரசு எடுத்தது. அதில் முக்கியமானது. நவ.8 2016 இல் எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை. வரி ஏய்ப்பவர்களுக்கு எதிரான இம்முடிவு நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தியது என டைம்ஸ் ஆப் இந்தியாவில் பத்தி எழுதியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. 

குரு வணக்கம்!

தன் முனைவர் படிப்புக்கு வழிகாட்டி குருவை விதந்தோந்தி போற்றியவர் கிருஷ்ணமூர்த்தி. தன் மூன்றாண்டுகளில் கடன்பெற்றோருக்கான தகவல்தளத்தை முதல் ஆளுநராக உருவாக்கிய பெருமை ரகுராம் ராஜனைச் சேரும். அவர் தன் பதவிக்காலத்தில் பணவீக்கவிகிதத்தை 11% -5% ஆக குறைந்து 5 சதவிகித பொருளாதார வளர்ச்சியை 8% மாக மாற்றியவர். பொருளாத வல்லுநர்களில் ரகுராம் ராஜன் சச்சின் டெண்டுல்கர் போல என 2016 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி.

கிருஷ்ணமூர்த்தி இதையெல்லாம் கூறியது ஆலோசகர் பதவியை ஏற்பதற்கு முன்பு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். பெரும்பாலான பொருளாதார ஆலோசகர்கள், நிதி ஆயோக் அதிகாரிகள், ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் பாஜகவின் சுதேசி அறியாமையை சகிக்க முடியாமல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு பாடம் நடத்த செல்வது இயல்பானதாகி வருகிறது.  கிருஷ்ணமூர்த்தி தன் அனுபவங்கள் மூலம் என்ன விஷயங்களை அமுல்படுத்துகிறார், சாதிக்கிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும். 


ச.அன்பரசு
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ்