தாக்குதலுக்கு உதவும் ஜிசாட் 7 ஏ






இஸ்‌ரோவின் ஜிசாட் 7 ஏ, இந்திய விமானப்படையில் தொலைத்தொடர்புக்கென ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டது. என்ன பிரயோஜனம்? பல்வேறு படைகளை இணைக்கவும், ட்ரோன்களை இயக்கமும், உளவுப்பணிகளுக்கும் புதிய  தகவல் தொடர்பு  செயற்கைக்கோள் உதவும்.

இஸ்‌ரோ அனுப்பிய 35 ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 7ஏ, 2,250 கி.கி எடை கொண்டது. ஆயுள் எட்டு ஆண்டுகள், செலவு 500 கோடி. 

"விமானங்களின் தகவல் தொடர்பை எளிமையாக்குவதற்கு இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும். இதன் மூலம் பல்வேறு விமானப்படை பிரிவுகளுக்கிடையே எளிதாக தகவல் பிரிமாற்றங்களை வேகமாக செய்ய முடியும்" என்கிறார் விமானப்படை இயக்குநரான பிஎஸ் தனோவா. KU பேண்ட் அலைவரிசையில் இந்த செயற்கைக்கோள் இயங்குகிறது என்பதால் கீழேயுள்ள நிலையங்களிலிருந்து விமானிகளுக்கு எளிதாக கட்டளைகளை பிறப்பிக்க முடியும்.

இதன் சிறப்பம்சம் என்ன?

கு பேண்ட் அலைவரிசையை பெற சிறிய ஆன்டெனா இருந்தால் போதுமானது. பிற அலைவரிசையைவிட பெரியது. மழை உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படாது.

இந்தியா இதுவரை ராணுவத்திற்கென பதிமூன்று செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. 2013 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 7 கடல் படைக்கான தகவல்களை பெற உருவானது. இதன்வழியாக கப்பல்களை எளிதாக கண்காணித்து தகவல் தொடர்புகளை பெற முடிந்தது.

ஒலியை சிக்னலாக மாற்றி செயற்கைக்கோள் பெற்று போர்விமானங்களுக்கு வழிகாட்டும். இச்சிக்னலை கீழேயுள்ள நிலையமும் பெறமுடியும். முக்கியமான இதன் பயன்பாடு, ஆளற்ற ட்ரோன் விமானங்களை இயக்கி எதிரிகளை தாக்கி அழிப்பது. ஜிசாட் 7 ஏ செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி f11 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் கிரையோஜெனிக் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது.

நன்றி: யு.தேஜோன்மாயம், சுரேந்திர சிங், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.












பிரபலமான இடுகைகள்