இடுகைகள்

தொடக்கப்பள்ளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக தன்னை அர்ப்பணித்த ஆசிரியை! - தேசியளவில் சிறந்த ஆசிரியர் - ஜூலியானா உட்ருபே

படம்
              மாற்றம் தரும் ஆசிரியர் கடந்த இரு ஆண்டுகளாக கல்வி என்பது மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்றுத்தரும் வழக்கம் குறைந்துவிட்டது . அதற்கான காலம் கூடிவரவில்லை . நோய்த்தொற்று பாதிப்பால் கல்வித்தளம் என்பது முழுக்க இணையம் சார்ந்ததாக மாறிவிட்டது . இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் இதைப்பற்றி என்ன பேசுவார்கள் என்பது முக்கியம்தானே ? நடப்பு ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் பரிசை ஜூலியானா உட்ருபே பெற்றுள்ளார் . இனிக் கல்விமுறையில் தனித்தனி மாணவர்களுக்கான திறனைப் பொறுத்தே அவர்களுக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது . கல்விமுறையையும் வேறுபட்டு சிந்திக்கும் , செயல்படும் மாணவர்களுக்கானதாகவே மாறும் என்றார் உட்ருபே . இவரை கவுன்சில் ஆப் சீப் ஸ்டேட் ஸ்கூல் ஆபீசர்ஸ்அமைப்பு சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுத்துள்ளது . உட்ருபே போன்ற அர்ப்பணிப்பான ஆசிரியர்கள் , புதுமைத்திறன் ஆகியவை இனக்குழு சார்ந்த மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் என்றார் கவுன்சிலின் இயக்குநரான காரிசா மொஃபாட் மில்லர் . 2005 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்களில் உட்ருபே மட்டும்தான் லத்தீன் பகுதியைச