இடுகைகள்

சிவகாசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன?

படம்
பசுமைப் பட்டாசுகள் சாதாரண பட்டாசுகளுக்குப் பதிலாக அரசு பசுமைப்பட்டாசுகளை அறிமுகம் செய்திருக்கிறது. உண்மையில் பசுமைப் பட்டாசுகளின் சிறப்பு என்ன? இதில் சாதாரண பட்டாசுகளை விட மாசுபடுதல் அளவு பிஎம் 2.5 எனும் அளவுக்கு இருக்கும். பட்டாசு தயாரிப்பில் பயன்படும் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளுக்கு மாற்றாக, பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஜியோலைட் எனும் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அரசு நிறுவனங்களாக சிஎஸ்ஐஆர் என்இஇஆர்ஐ ஆகியவை பசுமைப் பட்டாசுகளுக்கான ஒன்பது மூலக்கூறு கலவையை உருவாக்கியுள்ளன. இவை 30 சதவீதம் மாசுபடுதலைக் குறைக்கும். இதில் ஒலி, ஒளி சந்தோஷம் குறைவுபடாது. இந்தியாவில் பட்டாசுகளுக்கான சந்தை மதிப்பு 1800 கோடி. இவற்றின் தேவையை சிவகாசி பட்டாசுகள்தான் தீர்த்து வைக்கின்றன. இந்திய சந்தையில் சிவகாசியின் பங்கு 95 சதவீதம். இந்தியாவிலுள்ள எட்டு ஆய்வகங்கள் பசுமைப்பட்டாசுகளுக்கான மூலக்கூறு கலவையை ஆய்வு செய்து தயாரித்துள்ளன. எந்த பட்டாசில் என்ன மாதிரியான ஆய்வுக்கலவை உள்ளது என்பதை க்யூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து பார்த