இடுகைகள்

எரிபொருள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையா? உடான்ஸா? - விமான எரிபொருளாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்!

படம்
  உண்மையா? உடான்ஸா? சுவாசிக்கும்போது, ஒரு நேரத்தில் நாசித்துவாரங்களில் இரண்டில் ஒன்று மட்டுமே வேலை செய்யும்! உண்மை. மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதையும் சரியாக கவனித்துப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நீங்கள் உணர முடியும். குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு ஒருமுறை இப்படி மூச்சுத்துளைகளில் காற்று உள்ளிழுக்கப்படுவது இடது, வலது என மாறும். இந்த மாற்றம் உடலில் தன்னியல்பாக நடைபெறுகிறது.  பேக்கேஜிங்கில் பயன்படும் பபுள் ரேப், சுவர்களில் ஒட்டவே தயாரிக்கப்பட்டது! உண்மை. இதனை உருவாக்கியவர்கள் பொறியாளர் அல் ஃபீல்டிங், மார்க் சாவென்னஸ் ஆகியோர்தான். இவர்கள் இதனை சுவர்களில் தாள் போல அலங்காரமாக ஒட்டலாம் என நினைத்தனர். 1957ஆம் ஆண்டு,  தாம் தயாரித்த பபுள்ரேப், பொருட்களை உடையாமல் கொண்டு செல்ல பயன்படும் என்பதை நடைமுறைரீதியாக உணர்ந்தனர். அதனால்தான், அதனை நாம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.  நத்தைகளுக்கு கூர்மையான பற்கள் உண்டு!  உண்மை. நத்தை இனங்களில் சிலவற்றுக்கு ரிப்பன் போன்ற நாக்கும், சிறு பற்களும் கொண்ட தாடையும் உண்டு. இதற்கு ராடுலா (Radula) என்று பெயர். உணவுப்பொருட்களை குறிப்பிட்ட அளவில் கத்தரித்து சாப்பிட இப

வெப்பநிலை அதிகரித்தால் அதற்கேற்ப வாழ்வை திட்டமிடவேண்டும் - ஃபிரீடெரிக் ஓட்டோ

படம்
 ஃபிரீடெரிக் ஓட்டோ சூழல் அறிவியலாளர், இம்பீரியல் கல்லூரி (காலநிலை மாற்றம் - சூழல்) நீங்கள் செய்து வரும் ஆராய்ச்சியின் அடிப்படை என்ன? உலகம் முழுக்க உள்ள இயற்கைச்சூழலை மனிதர்கள் செய்யும் செயல்பாடுகள் எப்படி மாற்றுகின்றன என்பதைத்தான் நான் ஆராய்ந்து வருகிறேன்.  இங்கிலாந்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சிஸயசை தாண்டியுள்ளதை செய்தியில் அறிந்திருப்பீர்கள். இங்குள்ள சாலை, ரயில்பாதை அனைத்துமே 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாண்டாதபடி திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் இப்படி இருக்க முடியாது. அதற்கேற்ப நம்மை நாம் தயார் செய்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடலாம்.  வெப்பஅலை பற்றி உங்கள் ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது? உலகம் முழுக்க நாங்கள் வெப்ப அலை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறோம். வெப்ப அலை இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் இதில் மனிதர்களின் தூண்டுதல் அதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுகிறது. குறிப்பாக கரிம எரிபொருட்களை நாம் பயன்படுத்தி வருவது வெப்ப அலை நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்துகிறது. பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டத்தில் அதிகரிக்க முக்கியமான க

சமையல் எண்ணெய்யை விமான எரிபொருளாக பயன்படுத்தலாம்!

படம்
  சுவாசிக்கும்போது, ஒரு நேரத்தில் நாசித்துவாரங்களில் இரண்டில் ஒன்று மட்டுமே வேலை செய்யும்! உண்மை. மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதையும் சரியாக கவனித்துப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நீங்கள் உணர முடியும். குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு ஒருமுறை இப்படி மூச்சுத்துளைகளில் காற்று உள்ளிழுக்கப்படுவது இடது, வலது என மாறும். இந்த மாற்றம் உடலில் தன்னியல்பாக நடைபெறுகிறது.  பேக்கேஜிங்கில் பயன்படும் பபுள் ரேப், சுவர்களில் ஒட்டவே தயாரிக்கப்பட்டது! உண்மை. இதனை உருவாக்கியவர்கள் பொறியாளர் அல் ஃபீல்டிங், மார்க் சாவென்னஸ் ஆகியோர்தான். இவர்கள் இதனை சுவர்களில் தாள் போல அலங்காரமாக ஒட்டலாம் என நினைத்தனர். 1957ஆம் ஆண்டு,  தாம் தயாரித்த பபுள்ரேப், பொருட்களை உடையாமல் கொண்டு செல்ல பயன்படும் என்பதை நடைமுறைரீதியாக உணர்ந்தனர். அதனால்தான், அதனை நாம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.  நத்தைகளுக்கு கூர்மையான பற்கள் உண்டு!  ரியல் உண்மை. நத்தை இனங்களில் சிலவற்றுக்கு ரிப்பன் போன்ற நாக்கும், சிறு பற்களும் கொண்ட தாடையும் உண்டு. இதற்கு ராடுலா (Radula) என்று பெயர். உணவுப்பொருட்களை குறிப்பிட்ட அளவில் கத்தரித்து சாப்பிட இப்பற்களின் அம

சூழல் செய்திகள்- ஊழியர்களுக்கு சைக்கிள் கொடுத்த நிறுவனம், கடற்புரத்தை சுத்தம் செய்யும் மனிதர்!

படம்
  pixabay சூழல் செய்திகள் முட்டுக்காடு சூழல் காப்பாளர்! முட்டுக்காட்டில் வாழ்ந்து வருபவர், கிரேஷியன் மேத்யூ கோவியாஸ். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக கடற்கரையில் அலைகள் கொண்டு வந்து போடும் குப்பைகளை பொறுக்கி தனியாக அதனை ஒரு இடத்தில் போட்டு வருகிறார். இதன்மூலம் சூழலுக்கான ஆபத்து தவிர்க்கப்படுகிறது.  கடல் அலையில் ஒதுக்கப்படும் மரப்பொருட்களை இவர் புகைமூட்டம் போட எடுத்துச்செல்கிறார். மரம் உப்பில் ஊறி விட்டால் அதனை எளிதாக விறகாக பயன்படுத்த முடியாது. ஆனால் அதில் நிறைய புகை வரும். அதனை வைத்து தான் வாழும் வீட்டில் கொசுக்கள், பூச்சிகளை விரட்ட பயன்படுத்திக்கொள்கிறார். வீட்டில் இருந்து கடற்கரைக்குப் போகும்போதே அலுமினிய கண்டெய்னர் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அதில், கடற்கரையோரம் அலை ஒதுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கிறார். இப்படித்தான் பிளாஸ்டிக் பொருட்கள் சூழலைக் கெடுக்காமல் அதனை அப்புறப்படுத்தி வருகிறார்.  அனைவருக்கும் சைக்கிள் இப்படி கூறுவதற்கு இது அரசு திட்டமல்ல. மணலியில் செயல்படும் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் சைக்கிள்களை ஊழியர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் தொழி

விவசாயக் கழிவுகளில் வருமானம் கிடைக்கும்!

படம்
  விவசாயக் கழிவில் வருமானம்! டில்லியைச் சேர்ந்த டகாசர் நிறுவனத்தின் துணை நிறுவனர், வித்யுத் மோகன். இவர் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு நிலத்தில் தேங்கும் கழிவுகளை எரிபொருளாக, உரமாக மாற்றலாம் என்கிறார். இதன் காரணமாக விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரிக்க வேண்டியிருக்காது. மேலும் கழிவுகள் உரமானால் அதனை  எளிதாக நல்ல தொகைக்கு விற்கமுடியும். இந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. கழிவுகளை உரமாக்கும், எரிபொருளாக்கும் எந்திரங்களை மலிவான விலையில் தயாரித்து வழங்குவதுதான் மோகனின் பணி. கடந்த ஆண்டில் சிறந்த சூழல் கண்டுபிடிப்புக்காக எர்த்ஷாட் பரிசு பெற்ற ஐந்து கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். தனது இயந்திரத்தை ஆப்பிரிக்கா, இந்தியாவின் ஹரியாணா  ஆகிய இடங்களில் சோதனை செய்துள்ளார். நெதர்லாந்தில் டெல்ஃப்ட்  தொழில்நுட்ப கழகத்தில் முதுகலை ஆய்வு செய்தபோது, எந்திரத்தை உருவாக்கும் ஐடியா கிடைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க உள்ளார். ”வைக்கோல், உமி, தேங்காய் ஓடு ஆகியவற்றையும் எந்திரத்தின் வழியாக உரமாக மாற்றலாம் ”என தன்னம்பிக்கையோட

தெரியுமா - உயிரி எரிபொருள்

படம்
  pixabay உயிரி எரிபொருள் உயிரி எரிபொருள்,  தாவரங்கள், பாசி, விலங்கின்  கழிவுப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரிம எரிபொருட்களில் மாசுபாடு அதிகம். உயிரி எரிபொருட்களில் மாசுபாடு குறைவு என்பதோடு அதனை எளிதாக புதுப்பிக்க முடியும். உயிரி எரிபொருளைத் தயாரிக்க, பாசி  ஏற்ற இயற்கை ஆதாரம் என  சூழலியலாளர்கள் கூறுகின்றனர். சோளத்திலிருந்து எளிதாக உயிரி எரிபொருள் தயாரித்து வருகிறார்கள். இதற்கு, பயோ எத்தனால் என்று பெயர். அமெரிக்காவில் இம்முறையில்  உயிரி எரிபொருளைத் தயாரிக்கிறார்கள்.  உயிரி எரிபொருள் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம். சூரிய ஆற்றல், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி பாசி வளர்ச்சி பெறுகிறது. பாசியை அறுவடை செய்து அதிலிருந்து எரிபொருளை சுத்திகரித்து பெறுகிறார்கள். இதனை எரிவாயு,பெட்ரோல், டீசல் போல வாகனங்களில் பயன்படுத்தலாம். இதனை எரிக்கும்போது குறைந்தளவு கார்பன் டைஆக்சைடு வாயு வெளியேறும். இது சுழற்சியாக நடைபெறும்.  எரிபொருளின் தேவைக்காகவே பயிர்களை விளைவித்தால் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொருளாதார மற்றும் சூழலியலாளர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.   த

பசுமைப்பாதையில் பயணிக்கத் தொடங்கும் இந்திய ரயில்வே!

படம்
  பசுமைமயமாகும் ரயில்துறை! இந்திய ரயில்வே, 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களையும் மின்மயமாக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 2030ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் மின்சக்தியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.  இந்திய ரயில்களில் தினசரி பல லட்சம் மக்கள் குறைந்த கட்டணத்தில் நாடெங்கும் பயணித்து வருகின்றனர். 13 ஆயிரம் ரயில்கள் 67 ஆயிரத்து 956 கி.மீ தொலைவுக்கு சென்று பல்வேறு தொலைதூர நகரங்களை இணைக்கின்றன. இப்படி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தோராயமாக ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சற்றே குறைவானதுதான். பொதுப்போக்குவரத்திற்காக 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 115.45 லட்சம் கிலோ லிட்டர் அதிவேக டீசலை ரயில்கள் பயன்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  2019/20 காலகட்டத்தில் டீசல் ரயிலில் 43 சதவீத பயணிகளும், மின்சார ரயிலில் 57 சதவீத பயணிகளும் பயணித்துள்ளனர். 2000ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை டீசல் ரயிலில் பயணிக்கும் மக்களின் சதவீதம் 43.5லிருந்து 35.3 சதவீதமாக குறைந்துள்ளது. ‘’’எதிர்வரும் 2030ஆம் ஆணடு முதல் ரயில்வே த

எரிபொருளுக்கான மத்திய அரசு வரியைக் குறைக்க முடியாது! - நிதியமைச்சர் நிர்மலா

படம்
  நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் பொருளாதாரம் மெல்ல நல்ல நிலைக்கு மீள்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? பொருளாதாரம் மீள்வதை நான் மகிழ்ச்சியுடன் கவனித்து வருகிறேன்.  அனைத்து துறைகளிலும் நேர்மறையான விஷயங்கள், அறிகுறிகள் தெரிய வேண்டுமென நினைக்கிறேன். இதனை சிலர் சென்டிமென்ட் என்று கூறுவார்கள். சென்டிமென்ட் நேர்மறையாக இருக்கும்போது நிறைய மாற்றங்களை தரும் என நினைக்கிறேன்.  பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்? இரண்டுமே ஒன்றுபோலவே இருக்காது என்பது உண்மை. மக்களை பாதிக்காத அளவில் பணவீக்கம் இருப்பது பிரச்னையில்லை. இதை தடையாக நினைத்து வளர்ச்சிக்காக திட்டமிடாமல் இருக்கமுடியாது. வளர்ச்சிக்கான எங்களது செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.  கடந்த வாரம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலைகளை ஏன் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவில்லை? அப்படி கொண்டுவருவது மாநிலங்களின் முடிவுகளைச் சேர்ந்தது. எரிபொருள், மது தொடர்பான வரி விஷயங்களை மாநிலங்கள்தான் முடிவு செய்யவேண்டும். இதில் அவர்கள் வரிகளை குறைக்க அல்லது உயர்த்துவது பற்றி முடிவெடுக்கலாம்.  இந்த நேரத்த

நிலங்களில் சுரங்கம் அமைக்க முடியுமா?

படம்
மிஸ்டர் ரோனி பிபிசி  பூமியில் பல்வேறு கனிமங்களை சுரங்கம் அமைத்து தோண்டி விட்டோம். இனி மாசுபாடுகளின் பிரச்னைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தெருக்களில் நடந்து வருகின்றன. இதனால் வேறு கோளைத் தேடிச்சென்று சுரங்கம் அமைத்து கனிமங்களை பெற ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். அது இரவில் நம்மை குளிர்விக்கும் நிலா என்றால் ஆச்சரியப்படுவீர்கள். நிலவின் தென் முனையில் மனிதர்கள் வாழ்வதற்கான நீராதாரம் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. மனிதர்கள் இங்கு வாழ நினைத்தால் இப்பகுதியில் காலனிகளை அமைக்கலாம். இங்கு கிடைக்கும் உலோக கனிமங்களும் நம்மை கவர்ந்து ஈர்க்கின்றன. சிலிகான், அலுமினியம், நியோடைமினியம், லாந்தனம், டைட்டானியம் ஆகியவை நிலவில் அதிகளவு உள்ளன. மேலும் தரைப்பரப்பில் ஹீலியம் 3 எனும் ஐசோடோப்பு கிடைக்கிறது. இதனை அணுஉலையில் பயன்படுத்த முடியும். இதனால் பல்வேறு அணுஉலை நிறுவனங்கள் நிலவை தோண்ட ஆர்வமாக முன்வந்துள்ளன. பிபிசி  நிலவில் உள்ள கனிமங்களை பல்வேறு உலக நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் முயற்சிகளை செய்து வருகின்றனர். 1979ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. நிலவை உலக நாட

கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் வீடுகள் - இங்கிலாந்தில் புது ரூல்!

படம்
giphy.com மாற்றம் தரும் பசுமை வீடுகள் !   இங்கிலாந்தில் உள்ள வீடுகளில் வெளியாகும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க கார்பன் வெளியீட்டுக்கு எதிரான மனநிலை உருவாகிவருகிறது. இதன்காரணமாக தனிநபரின் இயற்கைவள ஆதாரங்கள் செலவு, தொழிற்சாலைகளின் பங்கு, உணவுக்கு உதவும் பண்ணை விலங்குகள் என அனைத்தையும் சூழலியலாளர்கள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்தில் வெளியாகும் கார்பன் வெளியீட்டுக்கு, அங்கு வாழும் மக்களின் வீடுகளும் முக்கியக்காரணம் என அரசு கண்டறிந்துள்ளது. இதன்விளைவாக, 2022க்குள் கட்டப்படும் புதிய வீடுகள் கார்பன் வெளியீடு குறைந்த பசுமை வீடுகளாக்க முயன்று வருகிறது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும், 2 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் அறைகளை சூடாக வைக்க கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர். அவற்றைத் தவிர்க்க வைக்கும் வழிகளை அரசு தேடிவருகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளிலும் பசுமை வீடுகளுக்கான விதிகள் அமலாக இருக்கின்றன. தற்போது வீடுகளுக்குத் தேவைப்படும் வெந்நீர் பொதுவா