வெப்பநிலை அதிகரித்தால் அதற்கேற்ப வாழ்வை திட்டமிடவேண்டும் - ஃபிரீடெரிக் ஓட்டோ
ஃபிரீடெரிக் ஓட்டோ
சூழல் அறிவியலாளர், இம்பீரியல் கல்லூரி (காலநிலை மாற்றம் - சூழல்)
ஐரோப்பாவில் நடைபெறும் காட்டுத்தீ சம்பவங்கள் பற்றி தங்களின் கருத்து என்ன ?
அதிக வெப்பம், வறண்ட சூழ்நிலை, வேகமாக வீசும் காற்று ஆகியவையே காட்டுத்தீ அதிகளவில் ஐரோப்பாவில் ஏற்பட முக்கியமான காரணங்கள். இங்கிலாந்தின் வடக்குப்பகுதி இந்த முறையில் வறண்ட சூழ்நிலையில் உள்ளது. இது எளிதாக காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பு தருகிறது. காலநிலை மாற்றமே காட்டுத் தீ ஏற்படுவதற்கான முக்கியமான காரணம். ஐரோப்பாவின் தெற்குப்பகுதி கோடைக்காலத்தில் அதிக வறட்சியாக உள்ளது. இதுவே காட்டுத்தீ சம்பவங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பை உருவாக்குகிறது.
அதிகவெப்பநிலை, வேகமாக வீசும் காற்று ஆகியவை காட்டுத்தீயை தடுக்க முடியாத சூழலை ஏற்படுத்துகின்றன. மக்களுக்கு இதுபற்றி கல்வியை நாம் ஏற்படுத்தலாம். இதனால் சேதத்தைக் குறைக்க இயலும்.
நீங்கள் கரிம எரிபொருட்களை குறைக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள். புதுப்பிக்கும் ஆற்றல் வளங்கள் நம் தேவையை சமாளிக்க உதவுமா?
கரிம எரிபொருட்களை விட புதுப்பிக்கும் ஆற்றல் வளங்கள் விலை மலிவானவை. நிலத்தில் நிறைய காற்றாலைகளை அமைக்க வாய்ப்புள்ளது. வெப்ப அலை பாதிப்பால் சாதாரணமாக இயங்கும் ஆற்றல் வளங்கள் சேதமானால் கூட புதுப்பிக்கும் ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட இடத்தில் மையப்படுத்தாமல் நாடு முழுக்க அமைக்கவேண்டும். ஜெர்மனி நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு வடக்குப்பகுதியில் நிறைய காற்றாலைகள் உண்டு. ஆனால் தெற்குப் பகுதியில் மக்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் காற்றாலைகள் குறைவு. இதற்கு காரணம், அங்கு காற்றாலைகள் அமைக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. இந்த பிரச்னைகளை நாம் கடந்து வர வேண்டும். அப்போதுதான் சாதனைகளை செய்ய முடியும்.
டைம்ஸ் ஆப் இந்தியா
ஸ்ரீஜனா மித்ரா தாஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக