செவ்வாயில் கேட்ட ஒலியை பதிவு செய்யும் நாசாவின் முயற்சி

 






செவ்வாயில் கேட்ட ஒலி!

பல்லாண்டுகளாக செவ்வாய் கோளின் தரையில் என்ன ஒலி கேட்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அமெரிக்காவின் நாசா அமைப்பு, இதை ஆராய மார்ஸ் போலார் லேண்டர், பீனிக்ஸ் ஆகிய திட்டங்களை உருவாக்கியது. ஆனால் இவை ஒலியை பதிவு செய்யமுடியாமல் தோல்வியுற்றன. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாசாவின் பர்சீவரன்ஸ் ரோவர் (Perseverance Rover), செவ்வாயில் தரையிறங்கியது. 

ரோவரில் உள்ள 2 மைக்ரோபோன்களின் மூலம் செவ்வாயின் தரைப்பரப்பு ஒலி, பதிவு செய்யப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் கூடுதலாக பதிவான ஒலிக்கோப்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதன்மூலம், செவ்வாய் கோளில் காற்றில் ஒலி எப்படி பரவுகிறது என்ற தகவல்களை அறிந்துகொண்டனர்.

 செவ்வாயில் காற்றின் அழுத்தம் 0.6 கிலோ பாஸ்கல் ஆகும். பூமியை விட செவ்வாயில் காற்றின் அழுத்தம் 200 மடங்கு குறைவு. கரியமில வாயு நிறைந்துள்ள சூழலில் வெப்பநிலை - 63 டிகிரி செல்சியஸாக உள்ளது. செவ்வாயில் குளிர் அதிகம் என்பதால், ஒலி நொடிக்கு 240 மீட்டர் வேகத்தில் செல்கிறது.  பூமியில், ஒலி நொடிக்கு 340 மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. செவ்வாயில் கேட்கும் ஒலி பற்றிய தகவல்களை, பிரான்ஸ் நாட்டின் புவி அறிவியலாளர் தன்கய் பெர்ட்ராண்ட் குழுவினர் நேச்சர் இதழில் வெளியிட்டுள்ளனர்.      

Popular mechanics



கருத்துகள்