வினிகர் தயாரிக்க உதவும் கசப்புச்சுவை கொண்ட ஆப்பிள் !

 










ஜெர்மன் சாக்லெட் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது!


உண்மை. ஜெர்மன் சாக்லெட் என்பதிலுள்ள ஜெர்மன் என்பது நாடல்ல. 1852ஆம் ஆண்டு சாக்லெட் கேக்கை கண்டுபிடித்த சாம் ஜெர்மன் என்பவரைக் குறிக்கிறது. இவர், பேக்கர் என்ற நிறுவனத்திற்காக சாக்லெட் கேக் ரெசிபியை உருவாக்கினார். இதனை ஜெர்மன் ஸ்வீட் சாக்லெட் என்ற பெயரில் விற்பனை செய்தனர். 

ஜப்பானில் வெண்டிங் இயந்திரங்கள் அதிகம்!


உண்மை. தோராயமாக அங்கு வாழும் மக்களில் 40 பேருக்கு, ஒரு வென்டிங் இயந்திரத்தை தெருக்களில் அமைத்திருக்கின்றனர். இதில் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், நூடுல்ஸ், ஒருமுறை பயன்படுத்தும் கேமரா ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மக்கள் காசு கொடுத்து அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.  

பூஞ்சைகள் தாக்கும் உயிரினங்களின் மூளையைக் கட்டுப்படுத்தும்1


உண்மை. ஓபியோகார்டிசெப்ஸ் (Ophiocordyceps) என்ற பூஞ்சை , எறும்புகளைத் தாக்குகிறது. 9 நாட்களில் அதன் மூளையைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெறுகிறது. இப்பூஞ்சை, எறும்பைக் கட்டுப்படுத்தி, தான் வாழ்வதற்கான பணிகளை செய்ய வைக்கிறது. 1931ஆம் ஆண்டு ஓபியோகார்டிசெப்ஸ் பூஞ்சை பற்றிய தகவலை முதன்முதலில் கண்டறிந்தவர், இங்கிலாந்து ஆய்வாளர் டாம் பெட்ச் ( Tom Petch).இது பற்றிய செய்தியை நேஷனல் ஜியோகிராபிக்  இதழ் வெளியிட்டுள்ளது. 

பசுவையும் காட்டெருமையும் இணைத்து புதிய உயிரினம் உருவாக்கப்பட்டுள்ளது!


உண்மை. அதன் பெயர் ஃபீபல்லோ (Beefalo). 19ஆம் நூற்றாண்டிலேயே பசுவையும், காட்டெருமையையும் ஒன்றாக இணைத்து புதிய கலப்பினத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினர். அதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டவர், கலோனல் சாமுவெல் பெட்சன். 1936இல் கனடா அரசு கலப்பின உயிரின ஆராய்ச்சியில் ஓரளவு வெற்றிகண்டது. தற்போது அமெரிக்கா, கனடாவில் பீஃபல்லோ விலங்கினமும், அதன் இறைச்சி விற்பனைக் கடைகள செயல்பட்டு வருகின்றன. 

அமெரிக்காவில் தொடக்க கால ஆப்பிள் மரங்களை ஜானி என்பவரே நட்டார்!


உண்மை. ஜானி சாப்மென் என்பவர் 1774ஆம் ஆண்டு அமெரிக்காவின் மசாசூசெட்சில் பிறந்தார். இவர், 1798 ஆம் ஆண்டு தொடங்கி பென்சில்வேனியா, ஓஹியோ என பல்வேறு மாகாணங்களில் ஆப்பிள் மரங்களை நட்டார். இவை நாம் சிறப்பங்காடியில் வாங்கி சாப்பிடும் ஆப்பிள் போல இனிப்பான கனிகளைக் கொண்டவை அல்ல. சிறிய,சாப்பிட முடியாத   கசப்பு சுவை கொண்டவை. இக்கனிகளைக் கொண்டு சிடர், வினிகர் தயாரித்தனர். 



https://www.rd.com/list/interesting-facts/

https://en.wikipedia.org/wiki/Beefalo

https://en.wikipedia.org/wiki/Ophiocordyceps

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்