இடுகைகள்

கவிதை - காதல்விகடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீ விரும்பி விளையாடும் பொம்மை!

படம்
காதல் விகடன் கவிதைகள்! நீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால் பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்னை! கொஞ்சூண்டுதான் இருந்தாள் யாருக்கும் தர முடியாத காதலாக இருந்தாள் -பா.ராஜாராம் கிளிப்பேச்சு! திருக்கல்யாணம். வண்டி கட்டி வந்து குவிகிறது ஊர் மொத்தமும் நம் திருமணத்திற்கு தேர் கட்டி வந்து குவிவார்கள் கடவுள் மொத்தமும்! - பொன்.ரவீந்திரன் நாளைக்கு மிச்ச முத்தம்! ஒரு சில முத்தங்களிலேயே உதறி விலகினாய் நாணமா? என்றேன். நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்றாய். அடி கள்ளி நாளைய முத்தங்களை இன்றுவரையா வைத்திருப்பேன் - மா.காளிதாஸ் யாரோ ஒருத்தி ! உன் கோணல் எழுத்துக்களைப் போல இல்லை இந்த நேர்த்தியான எஸ்எம்எஸ்கள் ஒரு கடிதம் இடேன்! யாரோ ஒருவர் கைதட்டி அழைத்தபோது திரும்பி உன்னை யாரோ ஒருத்தியாக நினைக்க முடியவில்லை! - ஜா.பிராங்க்ளின் குமார். பத்திக்கிச்சு! உதட்டோடு உதடு உரச முத்தத்தால் பற்றவைக்கிறார் உயிரின் திரியை வெடித்து சிதறுகிறது அது ஒரு வாணவெடியாய்! - ப்ரியன் முத்த நிகழ்வொன்று முடிந்ததும் முத்தெடுத்ததாக சொன்னாய்.. மூச்சடைத்தபடி கிடந்தத

ஸ்வீட் நவம்பர்!- காதல் கவிதைகள்!

படம்
குமுதம் பல புதிய பகுதிகளை திடீரென ஆரம்பித்து ஆச்சர்யமூட்டுவது போல விகடனும் அடிக்கடி சில இணைப்பிதழ்களை கொடுத்து பரவசப்படுத்துவார்கள். அப்படி வெளியான காதல் விகடனிலிருந்து சில கவிதைகள் இங்கே! எனது காதலை ஒரு குழந்தையாகவோ பொம்மையாகவோ மாற்றத்தெரிந்திருந்தால்  எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் பார்த்ததும் அள்ளிக் கொஞ்சுவாய்! முட்டை கேக் ஆன்மா! எனது ஆன்மாவை முட்டை கேக்காக சாக்லெட்டாக மாற்றத்தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும். உனக்கு பிடித்திருந்தால் சாப்பிடுவாய் இல்லையெனில் குப்பைத்தொட்டியில் எறிந்துவிடலாம்! -ஜானகிராமன் இன்னும் கொஞ்சம் அடியேன்டி! இன்னும் அதிகம் ரசிப்பதுண்டு என்னை அடித்துவிட்டு நீ அழுத நிமிடங்களை! - சண்பகீ. ஆனந்த் காதல் என்பது.. அதிகாலை அலாரம் வைத்து விழித்திருந்து நிறுத்துவது மதில்சுவர் நண்பர்களை மறைந்திருந்து கழட்டுவது குதிரினிலே நெல்லைப்போல் வார்த்தைகளை நிரப்புவது எதிரினிலே பார்த்துவிட்டால் வழக்கம்போல் சொதப்புவது -நா.முத்துக்குமார் தனி எறும்பு! சென்ற மார்கழியை இனிப்பு பலகாரம்போல சுவைத்தோம் இருவரும். இந்த