நீ விரும்பி விளையாடும் பொம்மை!
காதல் விகடன் கவிதைகள்!
நீ விரும்பி விளையாடும் பொம்மை
என்பதால் பத்திரமாய்
வைத்திருக்கிறேன் என்னை!
கொஞ்சூண்டுதான் இருந்தாள்
யாருக்கும் தர முடியாத
காதலாக இருந்தாள்
-பா.ராஜாராம்
கிளிப்பேச்சு!
திருக்கல்யாணம்.
வண்டி கட்டி
வந்து குவிகிறது
ஊர் மொத்தமும்
நம் திருமணத்திற்கு
தேர் கட்டி வந்து
குவிவார்கள் கடவுள் மொத்தமும்!
- பொன்.ரவீந்திரன்
நாளைக்கு மிச்ச முத்தம்!
ஒரு சில முத்தங்களிலேயே
உதறி விலகினாய்
நாணமா? என்றேன்.
நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்றாய்.
அடி கள்ளி நாளைய முத்தங்களை
இன்றுவரையா வைத்திருப்பேன்
- மா.காளிதாஸ்
யாரோ ஒருத்தி !
உன் கோணல் எழுத்துக்களைப் போல இல்லை
இந்த நேர்த்தியான எஸ்எம்எஸ்கள்
ஒரு கடிதம் இடேன்!
யாரோ ஒருவர் கைதட்டி அழைத்தபோது
திரும்பி உன்னை
யாரோ ஒருத்தியாக நினைக்க
முடியவில்லை!
- ஜா.பிராங்க்ளின் குமார்.
பத்திக்கிச்சு!
உதட்டோடு உதடு
உரச
முத்தத்தால் பற்றவைக்கிறார்
உயிரின் திரியை
வெடித்து சிதறுகிறது
அது
ஒரு வாணவெடியாய்!
- ப்ரியன்
முத்த நிகழ்வொன்று முடிந்ததும்
முத்தெடுத்ததாக சொன்னாய்..
மூச்சடைத்தபடி கிடந்ததென்னவோ
நான்!
-ஜி.தேவி
ஒரு நிமிடத்தில் 20 எஸ்எம்எஸ்கள்
அனுப்பியது உலக சாதனைதான்
அதை சொல்லப்போக
முப்பது முறை இமைகளை சிறகடித்து
அதையும் முறியடித்தாய்!
- என்.விநாயகமுருகன்
நன்றி: காதல் விகடன் 17.2.2010