ஏலியனுக்கு புதிய மெசேஜ்!
ஏலியன்களை அறிய உதவி தேவை!
1974 ஆம் ஆண்டு புவர்டோ ரிகோ பகுதியிலிருந்து
ஆர்ச்சிபோ ஆய்வகத்திலிருந்து அயலுலகவாசிகளுக்கு
படச்செய்தி அனுப்பப்பட்டது. 21 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவுக்கு ஆர்ச்சிபோ ட்ரான்ஸ்மிட்டர்
மூலம் செய்தி அனுப்பப்பட்டு 44 ஆண்டுகளாகின்றன.
தற்போது அனுப்பிய செய்தியை மேம்படுத்தி
எழுத மக்களின் உதவியை ஆர்ச்சிபோ ஆய்வகம் கோரியுள்ளது.
ஆயிரத்து 679 பைனரி எழுத்துக்கள்
மூலம் பூமியின் இடம், மனிதர்களின் டிஎன்ஏ பற்றி செய்தியாக எழுதி விண்வெளிக்கு அனுப்பி
வைத்தனர். ஏறத்தாழ டெட்ரிஸ் விளையாட்டு டிசைனில் உருவான செய்தி இது. இதற்கான முதல்
செய்தியை விண்வெளி வீரர் ஃபிராங் ட்ரேக், கார்ல் சாகன் ஆகியோரின் உதவியுடன் எழுதினார்.
ஆய்வகம் புதிய செய்தியை எப்படி எழுதித்தர விரும்புகிறது என்பதை அறிவியலாளர்கள் தெளிவாக
இன்னும் அறியவில்லை.