எறும்புகளை லபக்கும் எறும்பு தின்னி!






Image result for anteater





எறும்புதின்னிகள் தோராயமாக 2 அடி நீளமுள்ள நாக்கை இரைதேட பயன்படுத்துகிறது. எறும்பு புற்றில் நாக்கை விட்டு துழாவினால் ஒரேமுறையில் 20 ஆயிரம் எறும்புகளை லம்பாக பிடித்து தின்னும்.

சூழலுக்கேற்ப நிறம் மாற்றும் பச்சோந்தி, அதனை சுற்றுப்புறத்தின் தட்பவெப்பத்திற்கேற்ப மாற்றுகிறது. சிவப்பு, ஆரஞ்சு, நீலம் ஆகிய நிறங்களை பிரதிபலிக்கிறது பச்சோந்தி. தோலினை நிறம் மாற்றும் இம்முறையில் தன் இனத்தினை தொடர்புகொள்கிற விஷயமும் உண்டு.

சிறிய பாம்பு கடித்தாலும் உடனே மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது முக்கியம். ஏனெனில் பாம்பு சிறியதானாலும் விஷம் வயதுமுதிர்ந்த பாம்பிலும், சிறிய பாம்பிலும் ஒன்றேதான்.
நீரில் நீந்த பூனைகளை விட நாய்களே ஏற்றவை. ஐரிஷ் வாட்டர் ஸ்பேனியல், டக் டோலிங் ரெட்ரீவர் ஆகிய நாய்கள் நீச்சலில் சாம்பியன்கள். பூனைகளின் முடி நீர் பட்டால் விரைவில் காயாததும், கால்கள் நீரில் நீந்த ஏற்றபடி இல்லாததும் முக்கிய காரணம்.

இவ்வாண்டில் நாய்களுக்கு பெருமளவு சூட்டப்பட்ட பெயர்கள் சார்லி, கோகோ, டெய்ஸி.



பிரபலமான இடுகைகள்