குழந்தைகளின் மனதை வென்ற கிளாசிக் மிக்கி 90!
மிக்கி 90!
1928 ஆம் ஆண்டு நவ.28 அன்று ஸ்டீம்போட்
வில்லி என்ற திரைப்படத்தில் உலகிற்கு அறிமுகமானது மிக்கிமௌஸ் கதாபாத்திரம். மௌனப்படங்களின்
சூப்பர்ஸ்டார் சார்லி சாப்ளின் மிக்கிமௌஸூக்கு இன்ஸ்பிரேஷன்.
மிக்கிமௌஸ் பெயரை வேடிக்கையாக
இருக்கிறது என பரிந்துரைத்தது வால்ட் டிஸ்னியின் மனைவியான லில்லியன்.
7 நிமிட அனிமேஷன் படங்களுக்கு
10 ஆயிரம் மிக்கி மௌஸ் படங்களை டிஸ்னி குழு வரைந்தனர். மிக்கி மௌஸை மேம்படுத்திய ஓவியர்
பெயர், உப் ஐவெக்ஸ்.
மிக்கி மௌஸூக்கு டொனால்ட் டக்,
கூஃபி, ஃபெர்டி, மார்டி, மாமா மேக்ஸ்வெல், பிரென்ச் சமையல் கலைஞரான லூயி, சகோதரர் டிக்கர்
பெரிய குடும்பமே உண்டு.
1935 ஆம் ஆண்டு பிப்.23 அன்று
மிக்கி மௌஸ் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்திற்கு மாறியது.1955 ஆம் ஆண்டு மிக்கி,
டிவிக்கும் தாவி குழந்தைகளின் மனதை கொள்ளை கொண்டது.
மிக்கிமௌஸ் – மின்னி இருவருக்கும்
திருமணம் ஆனாலும் அவர்களின் உறவை டிஸ்னி அனிமேஷனாக மாற்றவில்லை. காரணம் கேட்டபோது,
“அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை அனிமேஷனுக்கு தேவைப்படவில்லை” என பதில் சொன்னார் டிஸ்னி.