பொதுசொத்து - கட்டற்ற அறிவு (அத்.9)









Image result for open source free means



கட்டற்ற அறிவு! – வின்சென்ட் காபோ
கட்டற்ற மென்பொருள்: பொது சொத்து!

16 பிட் திறனில் இது முழுக்க கட்டளைகளை எழுதியே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் கறார் கொண்டது. இதற்கடுத்து வெளியான விண்டோஸ் என்டி(1993),95(1995), ஆகியவை மக்களின் விருப்பத்திற்குரியவையாக மாறியது உலகறியும்.
நாம் அறியவேண்டியது அப்போது யூனிக்ஸ் 32 பிட், 62 பிட் திறனில் பல்வேறு பயனர்கள் இணைந்து பணிபுரியும்படியே இருந்தது என்பதைத்தான்.

நான் யார்?

1991 ஆம் ஆண்டு. ஃபின்லாந்தின் ஹெலின்ஸ்கி பல்கலையில் கணினி புரோகிராம் படித்துக்கொண்டிருந்த லினஸ் டோர்வால்சுக்கு தன் கணினியின் எம்எஸ்-டாஸ் போரடிக்க தானே புரோகிராம் எழுதி கெர்னல் ஒன்றை உருவாக்கினார். காசு பார்க்க நினைக்காமல் ஹாபியாக உருவாக்கியவர், அதனை எப்படியிருக்கிறது என்று பார்க்க தன் தோஸ்துகள், உறவுகள், உறவுகளின் தொடர்புகள் என உலகினருக்கு விலையில்லா பதிப்பாக்கினார். அது முழுமையான பதிப்பல்ல; ஏனெனில் இதில் இயங்கும்படி எந்த மென்பொருட்களையும் டோர்வால்ஸ் குறிப்பிடவில்லை.

அப்போது இந்த அமைப்பிற்கான மென்பொருட்கள் உதவிக்கு நம் கட்டற்ற மென்பொருள் நாயகன் ஸ்டால்மன் உதவிக்கு வருகிறார். அப்போது ப்ரீ சாஃப்ட்வேர் பவுண்டேஷனை தொடங்கி தனது மென்பொருள் வட்டாரம் மூலம் கட்டற்ற காப்புரிமையற்ற மென்பொருட்களை உருவாக்கிக்கொண்டிருந்தார் ஸ்டால்மன். ஜிபிஎல்(General public License) வெளியிடப்பட்ட இந்த மென்பொருட்களை தன் கெர்னலுக்கு ஏற்றபடி மாற்றி பயன்படுத்திக் கொண்ட லினஸ் டோர்வால்ஸ் இந்த ஓஎஸ்சுக்கு லினக்ஸ் (Lih –nucks) என பெயரிட்டார்.

அனைவருக்கும் சொந்தம்!

லினக்ஸ் கட்டற்ற மென்பொருளை விரும்பும் அனைவருக்குமானது. அதனை இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். ஆனால் தொழில்நுட்ப ஆதரவு தேவையென்றால் நீங்கள் ரெட்ஹேட், ஃபெடோரா, கனோனிகல், நோவா 2, மாண்ட்ரிவா
போன்ற நிறுவனங்களிடமிருந்து லினக்ஸை கட்டணம் செலுத்திப் பெறலாம்.

ஐபிஎம், ஹெச்பி, ஆரக்கிள், இன்டெல் உள்ளிட்ட முன்னணி டெக் நிறுவனங்கள் இன்றும் லினக்ஸை பயன்படுத்தி வருகின்றன. முக்கியமான மென்பொருட்கள் என ஜிம்ப், இங்க்ஸ்கேப், விஎல்சி, லிப்ரே ஆபீஸ் ஆகியவற்றை இதில் குறிப்பிடலாம்.

கூகுள், அமேஸான் ஆகிய நிறுவனங்கள் லினக்ஸ் கோடிங்குகளை தேடுதலுக்கும் இணைய விற்பனைத்தளங்களிலும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளன. பல்வேறு லினக்ஸ் ஓஎஸ்களை சர்வரில் பயன்படுத்த முடியும் என்பதால், லினக்ஸ் சர்வர்களில் பயன்பாட்டுக்கு வந்தது.



பிரபலமான இடுகைகள்