மறைந்துள்ள கேமராக்களை கண்டுபிடிக்க ஸ்பை ஃபைண்டர் புரோ!
பிரைவசி காக்க!
நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் இடத்திலும்
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஸ்பை கேமராக்களை கண்டுபிடிக்க ஸ்பை ஃபைண்டர் புரோ
டிடெக்டர் உதவுகிறது.
பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் இயங்கினாலும்
இயங்காவிட்டாலும் கூட ஸ்பை ஃபைண்டர் மூலம் அதனை கண்டறியமுடியும் என்பது இதன் பிளஸ்
பாய்ண்ட். கிக் ஸ்டார்டரில் அறிமுகமாயுள்ள ஸ்பை ஃபைண்டர் 10 ஆயிரம் டாலர்
முதலீட்டைப் பெற்றுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த சாதனம் அடிக்கடி
விடுதிகளுக்கு சென்று தங்குபவர்களுக்கு உதவக்கூடும்.
CCD,
CMOS, CCTV, Fisheye உள்ளிட்ட அனைத்து வகை கேமராக்களையும் எளிதாக
கண்டுபிடிக்கமுடியும். இதன் வியூபைண்டரில் கண்களை வைத்து பட்டனை அழுத்தினால்
எல்இடி லைட் இயங்கத்தொடங்கும். எங்கு கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதோ அந்த
லென்ஸில் ஸ்பை ஃபைண்டரின் எல்இடி வெளிச்சம் பட்டு பிரதிபலிக்கும். உடனே மறைவாய்
வைக்கப்பட்ட கேமராக்களை கண்டுபிடித்து பிரைவசி காக்கலாம். ஆடியோ ரீசிவர்களை
கண்டுபிடிக்கும் திறன், ஜிபிஎஸ் ட்ராக்கர்களை கண்டுபிடிக்க முடியாதது இதன் குறை.