காப்புரிமை: மனித உரிமை மீறல்! (அத்.7)
கட்டற்ற அறிவு – - வின்சென்ட் காபோ
7
காப்புரிமை - மனித உரிமை மீறல்
காப்புரிமை கொண்ட தனிநபர் பயன்படுத்தும் மென்பொருள்கள், காசு
கொடுக்கும் நபரே விரும்பினாலும் ஆதார புரோகிராம்களை பார்க்கவோ, அதனை மாற்றி மேம்படுத்த
முடியாது. அதன் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வழங்கும் வரையில் காத்திருந்தேயாக வேண்டும்.
ரெட்ஹேட் லினக்ஸ், தனியார் நிறுவனங்களுக்கு ஓஎஸ்ஸை இன்ஸ்டால் செய்து அதற்கு குறிப்பிட்ட
தொகையை கட்டணமாக பெறுகின்றன. இதில் சர்வீஸ் தொகைக்கான ஒப்பந்த தொகை தனி.
லினக்ஸ் பொறியாளர்
இதனை மேற்கொள்ளும்போதும் கட்டண நடைமுறை இதேதான்.
காப்புரிமை மென்பொருட்களில் பிரச்னை என்றால் உடனே சர்வீஸ் சென்டர்களில்
சரி செய்துகொள்ளலாம். கட்டற்ற மென்பொருளான லினக்ஸில் கம்யூன் முறையில் பிரச்னைகளை பேசி
நாமே சரிசெய்து கொள்ளலாம் என்றாலும் இது கணினி இயங்குவதை தாமதப்படுத்துகிறது. சமூகத்திற்கு
நன்மை தரும் மென்பொருட்களை கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்குவது உலகிலுள்ள பலருக்கும்
உதவும்.
என்னுடைய அறிவைப்பயன்படுத்தி உருவாக்கியதை எதற்கு இலவசமாக தரவேண்டும்? என கேள்வி
எழலாம். பத்து மென்பொருட்களை சந்தையில் விற்றால் அதில் மக்களுக்கு பயன்படும் ஒன்றை
இலவசமாக தருவதில் லாபம் எள்ளளவும் குறையாது. மேலும் கட்டற்ற மென்பொருளாக அதன் ஆதார
புரோகிராம்களை வெளியிட்டால் பலரும் அதனை மேம்படுத்த பயன்படுத்த உதவும்.
கட்டற்ற மென்பொருளை ஒருவகையில் மக்களுக்காக மக்களால் என்றே குறிப்பிடலாம்.
சி லாங்குவேஜ் கம்பைலரையும்(GNU), அடா கம்பைலரையும் இயக்க அமெரிக்க விமானப்படை உள்ளிட்ட
பல்வேறு நிறுவனங்கள் நிதியளித்து உதவின. கட்டற்ற மென்பொருள்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால்
எளிதாக நண்பர்கள் பகிர்ந்து கொண்டு பணியாற்றுவதோடு ஒவ்வொருவருக்குமான மென்பொருள் வாங்கும்
செலவும் குறைந்தால் நமக்கு லாபம்தானே! ஆண்ட்ராய்ட் கூகுள் வசம் சென்றபின் அதனை கட்டற்ற
மென்பொருளாக கூறமுடியாது. Tizen, Librem, Lineage ஆகியவை ஆண்ட்ராய்ட் ஓஎஸ்களாக செயல்பட்டு
வருகின்றன்.
என்ன சொல்லி அழைப்பது?
ரோஜாவை எந்த பெயர் சொல்லி அழைத்தால் என்ன? ரோஜாவுக்கென தனி வாசம்,
உருவம் உண்டு. ஆனால் அதனை பேனா என்று பொருந்தாத பெயரைச் சொன்னால் என்னாகும்? குழப்பம்
ஏற்படும் அல்லவா? அதனால்தான் வெறும் லினக்ஸ் என்று என்றில்லாமல் GNU/LINUX என்று கட்டற்ற
மென்பொருளை குறிப்பிடுகின்றனர்.
(சேகரிப்போம்)