இந்தியாவின் செழிப்பான மாநிலம் எது?
பணக்கார மாநிலம்! –
இந்தியாவில்
பணக்கார மாநிலங்களின் பட்டியலில் குஜராத்,
நான்காவது இடம் பிடித்துள்ளது. மாநிலத்திலுள்ள 58 பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.2
லட்சத்து 52 ஆயிரத்து 300 கோடிக்கும் அதிகம்.
குஜராத் கோடீஸ்வர
தொழிலதிபர்களில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற அதானி ரூ.71 ஆயிரத்து 200 கோடி சொத்து
மதிப்புடன் முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்து பங்கஜ் படேல்(ரூ.32,100 கோடி),
பத்ரேஷ் ஷா(ரூ.9,700 கோடி), கர்சன்பாய் படேல்(ரூ.9,600 கோடி), சமீர் மற்றும்
சுதீர் மேத்தா(ரூ.8,300 கோடி) சொத்துமதிப்புடன் கௌரவமாக பார்க்லேய்ஸ் ஹூருன்
இந்தியா பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிரா, 271
பணக்காரர்களை உருவாக்கி ரூ.21.14 லட்சம் கோடி சொத்துக்களோடு முதலிடத்தைப்
பிடித்துள்ளது.
இதற்கடுத்த
இடத்தை 163 பணக்காரர்களைக்(ரூ.6.7 லட்சம்
கோடி) கொண்டுள்ள டெல்லி பிடித்துள்ளது. இதற்கடுத்த இடங்களை கர்நாடகா(ரூ.3.49
லட்சம் கோடி), தெலங்கானா(ரூ.1.56 லட்சம் கோடி) பெற்றுள்ளன. நகரங்களின்
அடிப்படையில் மும்பை 233 பணக்காரர்களை வாழவைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கடுத்த இடங்களில் டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராத் ஆகியவை
இடம்பெற்றுள்ளன.