பயணங்களின் ராஜா!




Image result for enfield continental



பயணங்களின் ராஜா – - என்ஃபீல்ட் அதகளம்!

தொலைதூர பயணங்களின் ராஜாவான ராயல் என்ஃபீல்டின் அட்வான்ஸ் புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. ரூ. 5 ஆயிரத்தை முன்பணமாக செலுத்தி இன்டர்செப்டர் கன்டினென்டல் என இரு பைக்குகளையும் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொள்ளலாம். 

ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டர் 650 மற்றும் கன்டினென்டல் 650 ஆகிய இரு பைக்குகளும் டெல்லியை தவிர்த்து மற்ற இடங்களில் சுமார் ரூ. 3.5 லட்சத்திற்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிவரியை பொறுத்தளவில் டிசம்பர் மாத இறுதிற்குள் புக்கிங் செய்தவர்களுக்கு பைக்குகள் டெலிவரி செய்யப்படவிருக்கின்றன.

இங்கிலாந்தில் உள்ள ராயல் ஃபீல்டு நிறுவனத்திடம் இருந்து புதிய டெக்னாலஜியைப் பெற்று 650 சிசி பைக் உருவாக்கப்பட்டுள்ளது. 4 வால்வ் சிலிண்டர், ஆயில் கூலர், 47 பி.எச்.பி. மற்றும் 7,100 ஆர்.பி.எம். திறன் உள்ளிட்டவை இதன் ஸ்பெஷல்.   ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்டவற்றில் ராயல் என்ஃபீல் பைக்கிற்கு ரெட் கார்பெட் வரவேற்பு உள்ளது.  

இன்டர்செப்டர் 650 சிசி பைக்கில் 2500 ஆர்.பி.எம்.-ஆக இருக்கும் திறன் படிப்படியாக அதிகரித்து 6000 ஆர்.பி.எம். திறனை எட்டுகிறது. இதன் உச்சபட்ச வேகம் 7500 ஆர்.பி.எம்.
 6 கியர்களைக் கொண்ட கியர் பாக்ஸ் இன்டர்செப்டரின் வேகத்திற்கு பக்கபலம். இந்த பைக்கை உருவாக்குவதற்கான பல்லாண்டு ஆராய்ச்சி வீணாகாமல் இதுவரை வந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இது கம்பெனியின் பெயர்சொல்லும் பிள்ளை என புகழ்பெற்றுள்ளது. 

17 இன்ச் ஸ்போக் கம்பிகளுடன் டியூப்லெஸ் டயர்களை இன்டர்செப்டர் கொண்டுள்ளது. இது வலுவான கிரிப் மற்றும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஆற்றலை அளிக்கிறது.

இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் 320 எம்.எம்., பின்பக்கம் 240 எம்.எம். டிஸ்க் பிரேக்குகள் வேகத்தை கட்டுப்படுத்தும். அப்புறம் புக்கிங் பண்ணி பயணத்தை தொடங்குங்க ப்ரோ!

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்

நன்றி: மோட்டார் டுடே