கடலில் டேட்டா ஆய்வகம் - மைக்ரோசாஃப்ட் ஜெயிக்குமா?


ஆழ்கடல் ஆய்வகம்!


Image result for project nadic



2016 ஆம் ஆண்டு புராஜெக்ட் நாடிக் என்ற பெயரில் கடலுக்கடியில் ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை தொடங்கியது. மேக கணியம் அமைக்கும் முயற்சியின் முக்கியப்பகுதியாக ஆழ்கடல் ஆய்வகம் செயல்படும் என சத்யாநாதெள்ளா கூறியுள்ளார். “உலகின் 50 சதவிகித மக்கள் நீர்நிலையை ஒட்டி வாழ்கிறார்கள். உலகின் எதிர்காலத்திற்கு இதுபோன்ற தகவல்மையங்கள் உதவும்” என்று அழுத்தமான குரலில் பேசுகிறார் மைக்ரோசாஃப்ட் இயக்குநரான சத்யா நாதெள்ளா.    
ஸ்காட்லாந்தின் கடல்பகுதியில் 40 அடி ஆழத்தில் அமையவிருக்கும் தகவல்மையத்தில் 864 சர்வர்கள் அமைக்கப்பட்டு அதன் வெப்பத்தை குளிர்விக்கும் வசதிகள் செய்யப்பட்டுவருகின்றன. மேக கணிய வசதியை தடையின்றி பெறும்படி பல்வேறு தகவல் மையங்கள் அமைக்கப்பட ஸ்காட்லாந்து தகவல்மையத்தின் செயல்பாடு வெற்றிகரமாக அமைய பிரார்த்தித்து வருகிறது மைக்ரோசாஃப்ட் மேககணியக் குழு.