விண்கல மனிதர்கள்!
விண்கல மனிதர்கள்!
1961 ஆம் ஆண்டு ஏப்.12 அன்று சோவியத்
ரஷ்யாவின் வீரர் யூரி ககாரின் வோஸ்டாக் 1 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று முதல்வீரர்(108
நிமிடங்கள் இருந்தார்) என்ற சாதனை படைத்தார். இதேயாண்டில் மே 5 அன்று, அமெரிக்க வீரர்
ஆலன் பி ஷெப்பர்ட் புராஜெக்ட் மெர்குரி திட்டத்தில் விண்வெளிக்கு சென்று 15 நிமிடங்கள்
செலவிட்டார்.
1963 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று
சோவியத் பெண் வீரரான வாலென்டினா விளாதிமிரோவ்னா வோஸ்டாக் 6 விண்கலத்தில் விண்வெளி சென்ற
சாதனை படைத்தார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று, சோவியத் வீரர் அலெக்ஸி லியோனோவ்
முதன்முதலில் விண்வெளியில் நடந்த பெருமை பெற்றார்.
1969 ஆம்ஆண்டு ஜூலை 20 அன்று அப்போலோ
11 விண்கலத்தில் நிலவில் இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் ஜூனியர் அதில் நடந்து
சாதித்தனர். 1984 ஆம்ஆண்டு ஏப்.2 அன்று இந்திய விமானப்படையைச் சேர்ந்த ராகேஷ் சர்மா,
சோவியத் விண்கலத்தில் ஏறி விண்வெளி தொட்டார்.