நேரு இந்தியாவுக்கு செய்தது என்ன?






Image result for nehru



இந்தியாவில் நிகழ்ந்த அனைத்து துரதிர்ஷ் நிகழ்வுகளுக்கும் நேரு காரணம் என பாஜக கட்சி குறைகூறிவருகிறது. அப்படி எடுத்துக்கொண்டால் பிற பிரதமர்கள் எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது. நேரு, ஐரோப்பிய சிந்தனைகளால் தாக்கம் பெற்றாலும் அதனை இந்தியாவில் எப்படி செயல்படுத்துவது என கவனம் கொண்டிருந்நதவர். அதேசமயம் நாட்டு மக்கள் வேறுபாடுகளின்றி ஒற்றுமையாக இருக்கவும் மெனக்கெட்டார். வல்லரசுகளின் வளர்ச்சியை இந்தியாவில் செயல்படுத்த முயற்சித்தார். பதவியிலிருந்து பதினைந்து ஆண்டுகாலம் ரஷ்யா, அமெரிக்காவின் உதவிகளைப் பெற்று மின்நிலையங்கள், அணு ஆராய்ச்சி, இரும்பு தொழிற்சாலைகள் என பலவற்றையும் உருவாக்கினார். 

சர்தார் படேல் கட்சி தொண்டர்களுக்கு அடையாளம் தெரிந்தாலும் மக்களுக்கு அறிமுகமானவர் அல்ல. மேலும் மக்களிடையே திட்டங்களை விளக்கிப் பேசவும் நேரு சரியானவர் என காந்தி நினைத்தார். படேல் ஒருவகையில் கட்சியை கவனிக்க நேரு நாட்டை பார்த்துக்கொண்டார். தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பற்றி மாநில முதல்வர்களுக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதி தொடர்பிலேயே இருந்த பிரதமர் இன்றுவரையிலும் நேரு மட்டுமே.  

இந்தியத்தலைவர்களை அடுத்த தலைமுறையினர் மறக்க கூடாது என்றால் அவர்களின் சமூகச்செயல்பாடுகளை பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். நேரு, படேல், காந்தி உள்ளிட்ட யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. ஆக்கப்பூர்வ விமர்சனங்களே அவர்களின் செயல்களை மக்களின் மனதில் நிறுத்தும். 



நவீனச்சிற்பி நேரு!

1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக செங்கோட்டையில் இந்தியக்கொடி ஏற்றிய நேரு, மக்களிடையே உரையாற்றினார்.

1948 ஆம் ஆண்டு பிப்.12 அன்று காந்தியின் இறுதிச்சடங்கி் நேரு பங்கேற்றார். தில்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட காந்தியின் அஸ்தி, கங்கையில் கரைக்கப்பட்டது.

1955 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவிற்கு 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரு, பிலாய் மற்றும் பொகாரோ இரும்பு தொழிற்சாலைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுவந்தார். ஸ்டாலின்கிரேட்டில் மின்நிலைய கட்டுமானத்தை பார்வையிடுகிறார் நேரு.  

1959 ஆம் ஆண்டு மே21  அன்று, எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிட டிசைனை பிரதமர் நேருவிடம் விளக்குகிறார் மருத்துவமனை இயக்குநர்.

1961 ஆம்ஆண்டு அணிசேரா இயக்க மாநாட்டில் எகிப்தின் காமல் அப்தெல் நாசர், யூகோஸ்லேவியாவின் ஜோசப் டில்டோவுடன் நேரு அமர்ந்திருக்கிறார். 

-ச.அன்பரசு
நன்றி: ஃப்ரன்ட்லைன் மாத இதழ்