விலங்குகளை வேட்டையாட சீனா பச்சைக்கொடி!
மருத்துவத்திற்கு தடை நீக்கம்!
–
மருத்துவத்தில் காண்டாமிருகம்
மற்றும் புலிகளின் கொம்புகள், எலும்புகளை பயன்படுத்த விதித்திருந்த தடையை சீன அரசு
அண்மையில் விலக்கிக்கொண்டுள்ளது.
“25 ஆண்டுகளாக எலும்புகள் மற்றும்
கொம்புகளை மருத்துவத்திற்கு பயன்படுத்த இருந்த தடை விலக்கிகொள்ளப்படுகிறது. இப்பொருட்களை
பயன்படுத்தும்போது அரசிடம் அனுமதி பெறுவது அவசியம்” என சீன அரசின் கேபினட் செய்திக்குறிப்பு
தெரிவிக்கிறது. இதற்கு சூழலியல் ஆர்வலர்களிடையே கடுமையான கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
கடந்தாண்டு உள்நாட்டில் தந்தங்களுக்கான
சந்தையை சீன அரசு ரத்து செய்வதாக அறிவித்து விலங்கு நேசர்களிடையே எக்கச்சக்க பாராட்டுக்களை
பெற்றது. ஆனால் சீன அரசின் தற்போதைய தடம் மாறிய அறிவிப்பு பாதுகாக்கப்படும் காண்டாமிருகங்கள்,
புலிகளை அழித்துவிடும் என அச்சம் சூழலியல் வட்டாரங்களில் பரவிவருகிறது.
“சீனா 25 ஆண்டுகளாக விதித்திருந்த
தடையை விலக்கிக்கொண்டது உலகளவிலான சூழலியல் பிரச்னையாக விரைவில் மாறும்” என எச்சரிக்கிறார்
உலக கானுயிர் அமைப்பைச்(WWF) சேர்ந்த மார்க்கரேட் கின்னார்ட்.