வெள்ளி பிட்ஸ்!
வெள்ளி தகவல்கள்!
வெள்ளிப் பொருட்களை மனிதர்கள்
கி.மு 3 ஆயிரம் ஆண்டுகளிலிருந்து பயன்படுத்தி வருகிறார்கள் என்கிறது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின்
அறிக்கை. துருக்கி, சீனா, கொரியா, ஜப்பான், தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயன்பாட்டிலிருந்ததை
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்துவதில்
வெள்ளி கில்லி என்பதால் பல்வேறு மின்சார்ந்த பொருட்களில் இதன் பயன்பாடு முன்னர் அதிகம்.
பின்னர் இதனை விலை குறைந்த திறன் மிக்க கடத்தியான செம்பு முந்தியது.
1720 ஆம் ஆண்டு ஜெர்மன் இயற்பியலாளர்
ஜோகன் ஹெய்ன்ரிச், வெள்ளியைப் பயன்படுத்தி முதன்முதலில் புகைப்படங்களை எடுத்தார்.
1940 ஆம் ஆண்டிலிருந்து வெள்ளி
அறுவை சிகிச்சை புண்களை ஆற்றும் மருத்துவசிகிச்சையில்(நுண்ணுயிரிகளுக்கு எதிராக) பயன்பட்டு
வந்துள்ளது. சில்வர் அயோடை மேகங்களில் தெளித்து பஞ்சம், வறட்சியான நிலப்பகுதிகளில்
மழையை ஏற்படுத்தலாம் என்பதை அமெரிக்க தட்பவெப்ப ஆராய்ச்சியாளர் பெர்னார்ட் வானேகர்ட்
1940 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.