ஆசியா பீபி உயிர்பிழைப்பாரா?
உயிர்பறிக்கும் மதநிந்தனை!
மதநிந்தனை வழக்கில் மரணதண்டனை
விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணை பாக்.உச்சநீதிமன்றம்
விடுவிக்க, அதை எதிர்த்த பாகிஸ்தானிய கட்சி தலைவர்கள் சாலையில் திரண்டு போராடி வருகின்றனர்.
2010 ஆம் ஆண்டு இஸ்லாமிய இறையான
முகமதுவை அவதூறாக பேசியதாக ஆசியா பீபி மீது வழக்கு பதிவாகி மரணதண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆசியா பீபிக்கு ஆதரவாக சட்ட அமைப்புகள் களமிறங்கி
போராடி அவரை விடுதலை செய்ய வாதிட்டன.
உச்சநீதிமன்றம் வாதங்களின் அடிப்படையில்
ஆசியாபீபியை விடுதலை செய்ய ஆணையிட்டதும் நாடெங்கும் அத்தீர்ப்புக்கு எதிராக மத தலைவர்கள்
மக்களை திரட்டி போராடி வருகின்றனர். பாக்.அரசு ஆசியாபீபிக்கு எதிராக அப்பீல் ஏதும்
செய்யவில்லை. மத தலைவர்கள் ஆசியாபீபிக்கு எதிராக திரண்டு சாலைகளை மறித்து கடைகளை அடைத்து
போராட்டம் நடத்துவதாக் பாக்.பிரதமர் இம்ரான்கானுக்கு தலைவலி தொடங்கிவிட்டது.
ஆசியாவுக்கு பல்வேறு வெளிநாடுகள்
அடைக்கலம் தர முன்வந்துள்ள நிலையில் அவர் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
லாகூர், இஸ்லாமாபாத் நகரங்களில் போராட்டம் வெடிக்க பாக்.அரசு தொலைபேசி சேவையை அந்த
வட்டாரங்களில் முடக்கியுள்ளது. ராணுவத்தில் கலகத்தை தூண்டினாலும் ராணுவ தளபதி ஆசிஃப்
காஃபூர் அரசுக்கு துணையாக இருந்துவருகிறார்.