பிரெக்ஸிட் முடிவு? -தெரசாமேக்கு நிஜ பரீட்சை!


பிரிவுக்கு ரெடி!


Image result for brexit




ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து பிரிவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி 7 லட்சம்பேர் பேரணியாக சென்றதுதான் உலகின் ஹாட் டாக்.

இங்கிலாந்து பிரதமர் தெரசாமே தன் அரசியல் வாழ்வில் கடினமான பகுதியில் இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியோடு இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதால் வர்த்தக வரி, உணவுப்பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் தலைதூக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஐரோப்பிய யூனியனிலுள்ள பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பாபுலிச வலதுசாரி தலைவர்கள் வெற்றிபெற்றதால் நிர்வாகக்குழுவில் அவர்களின் கையே ஓங்கியிருக்கும். இனி ஐரோப்பிய யூனியனின் ஒருங்கிணைந்த எதிர்காலமும், கூட்டுறவும் முன்பைப்போல இருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமுமில்லை. தடையற்ற வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விதிகள் இனி ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.   


பிரபலமான இடுகைகள்